செய்திகள் :

"அதிக குழந்தைகளைப் பெற்றெடுங்கள்" - சந்திரபாபு நாயுடுவைத் தொடர்ந்து ஸ்டாலினும் பேச்சு; பின்னணி என்ன?

post image

நேற்று (அக்டோபர் 20) ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தென்னிந்திய மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனப் பேசியிருந்த நிலையில், இன்று (அக்டோபர் 21) தமிழ்நாடு முதல்வரும் அதை வலியுறுத்தும் விதமாக "பதினாறு பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லக் கூடிய நிலைதான் இப்போது வந்திருக்கிறது" எனப் பேசியிருக்கிறார்.

இரு முதல்வர்கள் பேசியதும் தன்னிச்சையானதான என்ற குழப்பம் எழுகிறது.

இரண்டு முதல்வர்களும் ஒரே கருத்தை வலியுறுத்தினாலும், இருவரும் வெவ்வேறு காரணங்களை முன்வைக்கின்றனர். 'அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்த முதலமைச்சர்கள் தெரிவித்த காரணங்களைக் காணலாம்.

சந்திரபாபு நாயுடு பேசியது என்ன?

"இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதி என்ற சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறேன். ஏனென்றால், ஜப்பான், சீனா போன்ற நாடுகள் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் இளைஞர்களை விட வயதானவர்கள் அதிகமாக இருப்பதால், அதன் விளைவுகளை எதிர்கொள்கின்றன. அதே போலத்தான், தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் நெருக்கடியின் அறிகுறிகள் கூடிக்கொண்டே வருகின்றன.

சந்திரபாபு நாயுடு

2047 வரை மக்கள்தொகையில் இளைஞர்கள், முதியவர்களின் சராசரி விகிதத்தை இந்தியா சமன்செய்தாலும், நாட்டின் தெற்குப் பகுதிகள் ஏற்கனவே வயதான மக்கள்தொகையின் விளைவுகளைக் காணத் தொடங்கியுள்ளன.

ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள இளைஞர்கள், கிராமங்களிலிருந்தும் நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்கிறார்கள். முதியவர்கள் மட்டுமே கிராமங்களில் வசிக்கின்றனர். எனவே அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதால், எதிர்வரும் ஆண்டுகளில் அதிக துடிப்பான இளைய சமூகத்தை உருவாக்க முடியும்." என்று பேசியிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

இன்று (அக்டோபர் 21) சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், "இங்கு மணமக்களை வாழ்த்த நான் கடமைப்பட்டிருக்கிறேன். மணவிழா முடிந்ததும் உங்கள் செல்வங்களைப் பெற்றுக்கொள்ள இருக்கிறீர்கள். முன்பெல்லாம் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துவார்கள்.

மண மக்களை வாழ்த்திய முதல்வர்
அறநிலையத்துறை நிகழ்வு
அறநிலையத்துறை நிகழ்வு
அறநிலையத்துறை நிகழ்வு
அறநிலையத்துறை நிகழ்வு
அறநிலையத்துறை நிகழ்வு
அறநிலையத்துறை நிகழ்வு
அறநிலையத்துறை நிகழ்வு
அறநிலையத்துறை நிகழ்வு

பதினாறு என்றால் பதினாறு குழந்தைகள் அல்ல, பதினாறு செல்வங்கள். அந்த பதினாறு செல்வங்கள் என்னவென்று கேட்டால், மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், போகம், புகழ் இவைதான். இப்போது யாரும் 16 பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துவது இல்லை. 'அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள்' என்றுதான் வாழ்த்துகிறோம்.

ஆனால் இன்று மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கைக் குறைகின்றபோது, 'நாம் ஏன் அளவோடு பெற்றுக்கொள்ள வேண்டும். பதினாறு பெற்றுக்கொள்ளுங்கள்' என்று சொல்லக் கூடிய நிலைதான் இப்போது வந்திருக்கிறது. இதையும் நாம் மறந்துவிடக் கூடாது. எது எப்படியானாலும் நான் நம் மணமக்களைக் கேட்டுக்கொள்வது உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள் பிறந்தாலும் அவர்களுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள் என்றுதான்..." என்று பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே தமிழ்த்தாய் வாழ்த்து' - சீமான் சொல்லும் பாடல் எது?

தமிழ்நாடு ஆளுநர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் "தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி நீக்கப்பட்டது அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.இது குறித்து நாம் தமிழர் கட... மேலும் பார்க்க

`திமுக-வின் கடைசி தொண்டன் இருக்கும்வரை திராவிடத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது' - உதயநிதி ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்லத் திருமண விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திண்டுக்கல்லில் திமுக... மேலும் பார்க்க

TVK : பவுன்சர்கள் கட்டுப்பாட்டில் தவெக மாநாட்டுத் திடல்; பரபரக்கும் இறுதிக்கட்ட பணிகள் - Spot Visit!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாநாடு நடக்கவிருக்கும் வி.சாலை பகுதிக்கு நேரடி விசிட் அடித்திருந்தோம்.V.Salaiசென்னையிலிருந்து... மேலும் பார்க்க

``நான் களத்தில் வேகமாக ஓடுபவன்... விஜய் எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்!' - சொல்கிறார் சீமான்

கரூர் மாநகரையொட்டிய வெண்ணைமலையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான கோவில் நிலங்களை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மீட்கும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருக... மேலும் பார்க்க

`எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டார்; திமுக கூட்டணியை உடைக்க முடியாது' - ரகுபதி

புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் இன்று தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இலவச திருமண நிகழ்ச்சிய... மேலும் பார்க்க