மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
அதிமுக: செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக இன்று ( நவ. 1) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நடத்திக் கொடுத்தமைக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அந்தப் பாராட்டு விழாவில் நான் பங்கேற்றேன். செங்கோட்டையன் பங்கேற்காமல் தவறான கருத்து கூறினார்.
கடந்த 6 மாத காலமாகவே கட்சிக்கு எதிராக இருந்தார் செங்கோட்டையன். திமுகவின் B டீமாக தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.

செங்கோட்டையன் குறிப்பிடுபவர்கள் எல்லாம் பிரிந்துசென்றவர்கள் அல்ல. நீக்கப்பட்டவர்கள்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயல்பட்டதால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கட்சிக்குத் துரோகம் செய்தால் இதுதான் நிலைமை.
அதிமுக பொதுக்குழு முடிவே இறுதியானது. செங்கோட்டையன் திமுகவைப் பற்றி சட்டப்பேரவையில் பேசியதே இல்லை. கட்சிக் கூட்டங்களிலும் எதிர்த்துப் பேசியதில்லை.
ஜெயலலிதா இருக்கும்போது செங்கோட்டையனின் அமைச்சர் பதவியும் மாவட்டச் செயலர் பதவியும் பறிக்கப்பட்டன.
அவரை அமைச்சராக்கியது நான். நான் பொறுப்பேற்றபோதுதான், செங்கோட்டையனை மீண்டும் அமைச்சராக்கினேன்.
அதிமுக தலைமைக்கு விரோதமாகச் செயல்பட்டால் தலைமைக் கழகம் வேடிக்கை பார்க்குமா?

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்திருக்கிறார் செங்கோட்டையன். சட்டவிதிகளின்படியே செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் மூவரும் ஒன்றிணைந்து 2026 தேர்தலில் திமுகவுக்கு பி டீமாக செயல்படுவதுதான் இவர்களின் திட்டம்.
இந்த இயக்கத்தை யார் பலவீனப்படுத்த நினைத்தாலும், கட்சி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது" என்று கூறியிருக்கிறார்.


















