செய்திகள் :

``அந்தத் தோல்வி, நிறைய விஷயங்களைக் கத்துக் கொடுத்தது" -'கோலங்கள்' ஆதி|இப்ப என்ன பண்றாங்க - பகுதி 6

post image

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்ட வங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘இப்ப என்ன பண்றாங்க?’ என இவர்களைத் தேடிப் பிடித்தோம். விகடன் டாட்.காமில் (vikatan.com) இனி ஒவ்வொரு வாரமும் நீங்கள் இவர்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்

'கோலங்கள் கோலங்கள்... 2003 முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலங்களில் இரவு நேரங்களில் இந்தப் பாடல் ஒலிக்காத வீடுகளே இருக்காது. சினிமாவில் ஹீரோயினாக ஒரு ரவுண்டு வந்த தேவயானி 'சின்னத்திரைக்கு வந்திருந்தார். விகடன் தயாரிப்பில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பான 'கோலங்கள்' தொடர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது.

தொடரில் 'அபி' கதாபாத்திரத்தில் நடித்த தேவயானிக்கு டஃப் கொடுக்கும் வகையில் வில்லத்தனம் செய்பவராக 'ஆதி' கேரக்டரில் நடித்தவர் நடிகர் அஜய் கபூர்.

கோலங்கள் ஆதி

'இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க' என்ற கேள்விக்கு அவருடைய பதிலை பார்க்கும் முன் அவரது டிவி என்ட்ரி, சீரியல் நாட்கள் குறித்த ஒரு ரீவைண்டு பார்த்துவிடலாமா?

பூர்வீகம் பஞ்சாப். ஆனா வளர்ந்ததெல்லாம் டெல்லி. தொடர்ந்து ஐதராபாத், பிறகு சென்னை எனக் குடும்பம் நகர்ந்துகொண்டே இருந்த வாழ்க்கைச் சூழல். நடிப்பு ஆர்வம் துளிர் விடத் தொடங்கிய புதிதில் வடக்கே இருந்ததால் பாலிவுட் தான் முதலில் வரவேற்றது. அங்க சினிமா, சின்னத்திரை எனக் கொஞ்சம் பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தார்.

கோலங்களுக்கு முன் மும்பை பக்கம் இருந்தவர் எப்படித் தமிழ்நாட்டுக்கு வந்தார்?

கோலங்கள் ஆதி

முன்பொருமுறை நம்மிடம் பேசிய போது அவர் சொன்ன வார்த்தைகள் இவை..

''டெல்லி, ஐதராபாத் என சுத்திவிட்டுச் சென்னை பக்கம் வந்திருந்த நேரம் அது. பாலிட்வுல நடிச்சிட்டிருந்தப்பவே தமிழ்ல நடிக்கணும்கிற ஆசை இருந்துச்சு. அதனால இங்க அப்படியொரு வாய்ப்பு அமையாதான்னு எதிர்பார்த்துட்டுதான் இருந்தேன். அந்தச் சமயத்துலதான் எனக்கு ஏற்கெனவே தெரிஞ்ச ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட்தான் 'ஒரு கேரக்டருக்கு ஆர்ட்டிஸ்ட் தேடிட்டிருக்காங்க, நீங்க அந்தக் கேரக்டருக்கு செட் ஆவீங்கன்னு தோணுது. டைரக்டரைப் போய்ப் பாருங்க'னு சொன்னாங்க. 'கோலங்கள்' சீரியலுக்கான ஆடிஷன் அப்ப போயிட்டுருந்துச்சு. சரின்னு நான் போனேன். ஆனா அங்க உடனே க்ளிக் ஆகல. சில பல நாட்களுக்குப் பிறகுதான் என் மீது டைரக்டருக்கு நம்பிக்கை வந்து சீரியல்ல கமிட் ஆனேன்.

ஆனா அந்த ஒரு சீரியல் என் லைஃபையே மாத்திடுச்சுன்னு சொல்லலாம். என்னுடைய ஒரிஜினல் பெயர் எனக்கே மறந்து போற அளவுக்கு 'ஆதி'ங்கிற அந்த கேரக்டர் பெயர் ரீச் ஆகிடுச்சு. ஆரம்பத்துல 'தேவயானி'ங்கிற ஒரு பெரிய ஹீரோயினுடன் நடிக்கப் போறேன்னு நினைச்சு ஜெர்க் ஆன மாதிரில்லாம் ஞாபகம். ஆனா அவங்க அவ்வளவு ஒரு கனிவா பழகினாங்க. பாலிவுட்ல ஏற்கெனவே நடிச்சிருந்தாலும் ஒரு சீரியல் வில்லனுக்கு அவ்வளவு பெரிய ரீச் கிடைச்சதை நான் அப்பதான் பார்த்தேன்.

'ஓவர் நைட்ல பிரபலமாகிட்டான்னு சொல்வாங்களே, அது எனக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். ஆட்டோகிராப் கேக்கறதென்ன, கூட நின்னும் போட்டோ எடுக்கணும்னு கேக்கறதென்னன்னு அது ஒரு கனா காலம் சார். பொது இடங்கள்ல மக்கள்கிட்ட இருந்து கிடைக்கிற வரவேற்பு ஒருபக்கம்னா, நிகழ்ச்சிகளுக்கு கெஸ்ட்டா கூப்பிட்டா கூட்டம் இன்னொரு பக்கம். ஆனா சீரியல் ஷூட்டிங்கே பிஸியா இருந்ததால் நிறைய அழைப்புகளை ஏத்துக்க முடியாத சூழல்லாம் இருந்துச்சு.

நல்ல பேரும் புகழும் தந்த அந்ந சீரியல் நாலஞ்சு வருஷங்களைக் கடந்து ஒருவழியா முடிஞ்சது. ஆனாலும் அதுக்குப் பிறகும் தொடர்ந்து நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தன. நான்தான் சின்ன பிரேக் விடலாம்னு சில வாய்ப்புகளைத் தவற விட்டேன்''.

கோலங்கள் ஆதி

'கோலங்கள்' தொடருக்குப் பிறகு 'சன் டிவியில் ஒளிபரப்பான 'வள்ளி' தொடரிலும் லீட் ரோலில் நடித்த அஜய் ஒருகட்டத்தில்  சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டார்.

அதுகுறித்துக் கேட்டபோது, 'ஆதியும் அந்தமும்'னு ஒரு படம். நானே சொந்தமா தயாரிச்சேன். ஒரு ஆர்வத்துல இறங்கினேன். ஆனா படம் சரியா போகல. பொருளாதர ரீதியா பெரிய அடி. ஆனா நிறைய விஷயங்களைக் கத்துக் கொடுத்தது அந்தத் தோல்வி. ஆனாலும் நல்ல படங்களைக் கொடுக்கணும்கிற ஆர்வம் மட்டும் இன்னும் குறையவே இல்ல. எங்க அப்பா ஸ்க்ரீன் ப்ளே ரைட்டரா இருந்தவர். அதனால வருங்காலத்துல நானுமே ஏதாவது பண்ணனும்னு இருக்கேன். சில ஸ்க்ரிப்ட் கைவசம் இருக்கு'' என்கிறார்.

சமீபமாக 'கோலங்கள் பார்ட் 2' குறித்த பேச்சுகளும் கேட்டு வரும் நிலையில், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என அவரையே தொடர்பு கொண்டு பேசினோம்.

''என் ரசிகர்கள் இன்னைக்கும் என்னைப் பார்த்ததும், 'ஆதி'னுதான் கூப்பிடுறாங்க. 'கோலங்கள்' பார்ட் 2 வருமா அதுல நான் நடிப்பேனாங்கிறதை காலம்தான் முடிவும் செய்யும். முன்னாடி ஒரு டைம் திருச்செல்வம் சார் இது தொடர்பா பேசினார். மத்தபடி அந்த விஷயங்கள் நம்ம கையில இல்லயே. அதேநேரம் என்னுடைய ரசிகர்கள் எல்லாரும் எப்ப திரும்பவும் டிவி பக்கம் வருவீங்கன்னு கேட்டுட்டேதான் இருக்காங்க.

கோலங்கள் ஆதி

அவங்களுக்கு ஒரு விஷயம் சொல்லணும். நான் கடந்த சில வருடங்களாகவே டிவியிலதான் இருக்கேன். அதாவது ஸ்க்ரீனுக்குப் பின்னாடி. ஜீ தமிழ் சீரியல்ல சீரியல் தயாரிக்கிற தயாரிப்பு நிறுவனம் ஒண்ணுல முக்கியப் பொறுப்புல இருக்கேன். அதாவது புரடக்‌ஷன் மற்றும் நிர்வாகம் தொடர்பான பொறுப்பு அது' என்கிறார்.

மேலும் தன் மனைவியுடன் சேர்ந்து இயற்கை மருந்துகள் விற்பனை செய்யும் சென்டர் மற்றும் ஃபிட்னஸ் ஸ்டூடியோ ஒன்றையும் கூட நடத்தி வருவதாகத் தெரிகிறது.

ஸ்கிரிப்ட் கையில இருக்கு, நடிக்கவும் கூப்பிடுறாங்க என்கிற அஜய் திரும்பவும் ஸ்க்ரீனுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Serial Update: `இது ஒரு அழகான புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்!' கர்ப்பமானதை அறிவித்த நடிகை தர்ஷனா

`நீதானே எந்தன் பொன்வசந்தம்' தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தர்ஷனா அசோகன். அந்தத்தொடர் இவருக்குமிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்நிலையில் தர்ஷனாஜீ தமிழில் `கனா' தொடரில் நடித்திருந்தார். த... மேலும் பார்க்க

Samodu Vilayadu : `அவங்க வருத்தப்படுவாங்க... அதனால இப்ப அதை சொல்லல!' - சாம் விஷால் ஷேரிங்ஸ்

மீடியா மேசன்ஸ் யூடியூப் தளத்தில் வெளியாகும் நிகழ்ச்சி `சாமோடு விளையாடு (Samodu Vilayadu)'. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமான சாம் விஷால் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழ... மேலும் பார்க்க

Amir-Pavani: 'நீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே...' அமீர்- பவானி திருமணம்; குவியும் வாழ்த்துகள்

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் காதலிக்கத் தொடங்கிய அமீர்- பாவனி ஜோடிக்கு இன்று (ஏப்ரல் 20) திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சின்னத்தம்பி' சீரியலில் கதாநாயகியாக ... மேலும் பார்க்க

Priyanka: இலங்கை அரசியல் தலைவரின் குடும்பத்தில் பிரியங்கா; கணவர் வசியின் அரசியல் பின்னணி என்ன?

விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் வசி என்பவருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் நடந்ததல்லவா?பிரியங்காவின் கழுத்தில் தாலி கட்டிய அவரது கணவர் வசி குறித்து சமூக ஊடகங்களில் பலரும் ... மேலும் பார்க்க

Priyanka: 'உன்னை காதலிக்கும் நபரை மட்டும் கண்டுப்பிடிக்காமல் உன்னை..' - ப்ரியங்காவை வாழ்த்திய நிரூப்

பிரபல தொகுப்பாளரானப் ப்ரியங்காவிற்கு நேற்று( ஏப்ரல் 16) திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிக் பாஸ் பிரபலமும், ப்ரியங்காவின் நண்... மேலும் பார்க்க