அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகள்!
கடந்த 10 ஆண்டுகளில் (2024 - 25) அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 193 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தாலும், அவர்களில் 2 பேர் மீதான வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்திய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான குற்றவியல் வழக்குகள் குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க:கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - ராகுல் கேள்வி
ஆய்வில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் 28 சட்டப்பேரவைகளில் 4,123 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 4,092 பேரின் பிரமாணப் பத்திரங்கள் மீது பகுப்பாய்வு மேற்கொண்டதில், அவர்களில் சுமார் 45 சதவிகிதத்தினர் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
மேலும், 29 சதவிகிதத்தினர் மீது கொலை மற்றும் கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டு வழக்குகளும் உள்ளன. அதிகபட்சமாக, ஆந்திரத்தில் 79 சதவிகிதமாக 174 பேரில் 138 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 59 சதவிகித சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.