Mars: 'செவ்வாய்க் கிரகத்துக்கு 38வது புத்தாண்டு வாழ்த்துகள்!' - எப்படிக் கணக்கிட...
அரசுப் பேருந்தில் டிக்கெட் முன்பதிவு கால வரம்பு 90 நாட்களாக உயர்வு- இன்று முதல் அமல்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இன்று முதல் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக கூறியிருப்பதாவது, பயணிகளிடம் இருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயண திட்டமிடலுக்கு ஏதுவாக தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என்பதனை 90 நாட்கள் என உயர்த்தி திங்கட்கிழமை(நவ. 18ஆம் தேதி) முதல் அமலாகிறது.
எம்பிபிஎஸ் மாணவர் பலி: ராகிங் செய்த 15 பேர் மீது வழக்குப்பதிவு!
பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
தற்போது முன்பதிவு காலம் 60-ல் இருந்து 90 நாட்களாக உயர்த்தி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. முன்னதாக பண்டிகை காலத்தில் அரசுப் பேருந்தில் பயணிப்பவர்களுக்கு இரு சக்கர வாகனம், எல்இடி தொலைக்காட்சிப் பெட்டி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.