Viduthalai Part 2: ``விருப்பு வெறுப்பில்லாமல் ராஜா சார் செய்த செயல்... " - வெற்ற...
அவசரமாக இந்தியாவுக்கு திரும்பிய கௌதம் கம்பீர்; காரணம் என்ன?
தனிப்பட்ட அவசர காரணங்களுக்காக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தாயகம் திரும்பியுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது.
இதையும் படிக்க: சோகமாக இருக்கிறது, மீண்டும் ஒன்றிணைவோம்; ரிஷப் பந்த் குறித்து தில்லி கேபிடல்ஸ் உரிமையாளர்!
தாயகம் திரும்பிய கௌதம் கம்பீர்
பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியாவில் உள்ள கௌதம் கம்பீர், தனிப்பட்ட அவசர காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரது குடும்பத்தினருடன் இன்று (நவம்பர் 26) அதிகாலை இந்தியா திரும்பினார். தனிப்பட்ட தவிர்க்க இயலாத அவசர காரணங்களினால் அவர் தாயகம் திரும்பியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர் அணியுடன் மீண்டும் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அதிக விலைக்கு ஏலம்போன டாப் 10 வீரர்கள்; முதல் 5 இடங்களில் இந்திய வீரர்கள்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற டிசம்பர் 6 முதல் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.