செய்திகள் :

அவர்கள் நம்மை விட 30 ஆண்டுகள் முன்னேறி இருக்கிறார்கள்! : ஒரு தமிழனின் வியப்பூட்டும் சீன அனுபவம்!

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

இங்கிலாந்து பார்த்திருப்பீங்க…

அமெரிக்கா பார்த்திருப்பீங்க…

என் ஜப்பான் கூட பார்த்திருப்பீங்க!

சீனாவை பார்த்தீங்களா?

நட்பு நாடி அழைத்ததால், சீனா போக தீர்மானித்தோம். GT Holidays-ல் புக் பண்ணி கிளம்பினோம். 40 பேர் கொண்ட குழுவுடன், எங்கள் ‘வேணு’ (tour guide) தலைமையில் புறப்பட்டோம்! நரை, புரை, இறை கொண்ட மனிதர்களுடன் Cathay Pacific விமானம் உயரப் பறந்தது.

ரம்யமான வானிலை, மிதமான குளிர், அழகான ஊர் — எங்களை வரவேற்றது. பெய்ஜிங் தலைநகரம் தலை நிமிர்ந்து பார்க்க வைத்தது! சுற்றிலும் சுத்தம், ஒழுக்கம், ஒழுங்கு.

தியான்மென் சதுரம், போர்பிடன் சிட்டி, சம்மர் பேலஸ் — யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்கள் — பார்த்து ரசித்தோம். சீனாவில் பாதயாத்திரை வந்தது போல! ஒரு நாளைக்கு சுமார் 22,000 steps! ஏக்கர் கணக்கில் நடந்தோம், ரசித்தோம்.

பெய்ஜிங்கில் நம்மைக் கண்டு சீனர்கள் வியப்புடன் பார்த்தார்கள். இதுவரை ‘இந்தியர்கள்’ இவ்வளவு பேராக வருவது அவர்களுக்கு புதிது போல! எங்களைப் பார்த்து அத்தனை பேரும் புகைப்படம் எடுத்துக் கொண்டே இருந்தார்கள்!

ஏறினோம், ஏறினோம், களைத்து போகும் வரை ஏறினோம் பெரும் சுவரை! கண்ணுக்குத் தெரியும்வரை சுவர் தான் — உலக அதிசயம்! 21,000 கி.மீ நீளம் — நம் பூமியின் சுற்றளவு அளவு! கண்டு பிரம்மித்தோம்.

புல்லட் ட்ரெயினில் 352 கி.மீ வேகத்தில் பாய்ந்து Xian நகரம் சென்றடைந்தோம்! பழைய தலைநகரமா? புதிய மாநகரமா? ஒரே மாதிரியான அடுக்குமாடி குடியிருப்புகள் — ஒரே நிறத்தில்!

மன்னன் மரணத்திற்குப் பிறகும் தன்னைப் போல் ஒரு படை உலகம் வேண்டும் என நினைத்து, மண்ணுக்குள் உருவாக்கப்பட்ட 5000 போர்பொம்மைகள், குதிரைகள், படைகள், ஆயுதங்கள்! இன்னும் அழியாத பொக்கிஷம் — Terracotta Warriors! பார்த்து வியந்தோம்.

சீன கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது ஜேட் கற்கள் (Jade stones). திருமண நாளில் மணமகன் மணமகளுக்குக் ஜேட் வளையல் கொடுக்க வேண்டும். அணிந்த பிறகு அது வெளிர் நிறமாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதாம். ஜேட் கற்கள் உண்மையிலேயே விலையுயர்ந்தவை — நம்பினோம்!

சீனாவில் 89% மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை. ஆகையால் மதப் பேரணிகள் இல்லை. ஆனால் நாட்டுப்பற்று மட்டும் தலைநிமிர்ந்து நிற்கிறது!

எங்கு பார்த்தாலும் CCTV கேமராக்கள் — மிகவும் பாதுகாப்பான நகரங்கள். தூய்மை பணியாளர்கள் பெரும்பாலும் மூத்த குடிமக்கள்!

மாதுளை ஜூஸ், விதவிதமான பழச்சுவை தேநீர், நூடுல் சூப் — குடித்து குதுகலித்தோம்! ஸ்வீட் பீஸ் சாலட், செஸ்ட்நட் பொரியல், பாவ் பன்ஸ், டம்ப்ளிங்ஸ், கஞ்சி, பான் கேக்ஸ், டோஃபு — சுவைத்துப் பார்த்தோம்.

இங்குள்ள மெட்ரோ நிலையங்கள் நம் விமான நிலையத்தைவிட பல மடங்கு பெரியது! ட்ரெயினில் யாரும் யாரோடும் பேசுவதில்லை — அமைதி கட்டாயம்! நாமோ ரயிலில் பயணம் பண்ணும் போது, பக்கத்தில் அமர்ந்தவரின் ஜாதகம்கூட கேட்டு விடுவோம் இல்லையா?

சில இடங்களில் மக்கள் திறந்த வெளியில் உட்கார்ந்து, மொபைல் பார்த்தபடி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டோம். நாமோ இந்திய கழிவறை முறைக்கு நீண்ட நாட்களாகவே வழிவிட்டுவிட்டோம்!

சீனாவின் Golden Week என்பதால் கூட்டம் மிகுந்திருந்தது. ஆனால் நம்ம இந்தியர்களுக்கு இது புதிதல்ல! கூட்டம் இருந்தாலும் யாரும் ஒழுங்கை மீறவில்லை — தனிநபர் ஒழுக்கம் ததும்பியது.

ஷாங்காய் நகரத்தில் Oriental TV Tower-இல், மின் தூக்கியில் சில நிமிடங்களில் 259 மீட்டர் உயரத்தில் உள்ள கண்ணாடி தரை கொண்ட பார்வைக் கூடத்திற்குச் சென்றோம். கீழே நகரம் — கான்க்ரீட் ஜங்கிள்! வெறும் கண்ணாடி தரையில் நிற்கும் போது மனசு உறைந்து போனது!

ஹாங்பு நதியில் இரவில் கப்பல் க்ரூஸில் பயணம் செய்து, ஷாங்காய் நகரத்தின் மின்மினிக்கும் அழகை ரசித்தோம். எல்லா விளக்குகளும் 100% சோலார் பவரில் இயங்குவதாகக் கேட்டோம் — வியப்பே!

மற்றொரு சுவாரசியம் — எல்லோருடைய பைகளிலும் ஒரு பொம்மை தொங்கும்! ஆண்கள், பெண்கள் என அனைவரும் Lapoopoo அல்லது வேறு சிறு டாய்களை கீசெயினாக வைத்திருப்பார்கள். அது அவர்களது “செல்லப் பிராணி”யாம்! தனிமையில் அதனுடன் பேசுவார்களாம்! — என்ன கொடுமை சார் இது!

வைல்ட் கூஸ் பகோடா, பெல் டவர், டிரம் டவர், நாஞ்சிங் ரோடு மார்க்கெட், பண்ட், சில்க் ஸ்ட்ரீட், அக்வேரியம், முஸ்லிம் பஜார் — இவையெல்லாம் கண்டு மகிழ்ந்தோம்.

பதின்மூன்று வயதில் பதின்மூன்றாம் வாய்ப்பாடு கற்றது கை கொடுக்க, சீனப் பொருட்கள் இந்தியாவில் தான் மலிவு என உணர்ந்தோம்! Translator app முழு நேரமும் வேலை செய்தது — பேசி வாங்கினோம்! கப் அண்ட் சாஸர், கை விசிறி, குடை, பிரிட்ஜ் மாக்னெட், சில்க் துணி, தேயிலை, White Rabbit மிட்டாய் என பெட்டியை நிரப்பினோம்!

அப்புறம் rope car-ல் ஏறினோம், bike taxi ஓட்டினோம், Tai Chi கற்றோம், வான்ஸ் பழம் ருசித்தோம், ஹார்ஸ் நட் சாப்பிட்டோம். “நி ஹாவ் (Hello)”, “ஷே ஷே (Thank you)” என்று சொல்ல கற்றுக்கொண்டோம்.

சீனா நம்மை இன்னும் போட்டியாளராகவும், சில சமயம் எதிரியாகவும் நினைத்தாலும், உண்மையில் அவர்கள் நம்மை விட 30 ஆண்டுகள் முன்னேறி இருக்கிறார்கள்! தொழில்நுட்பம், ஒழுக்கம், AI, ரோபாட்டிக்ஸ், சுத்தமான எரிசக்தி, 5G/6G போன்ற தொலைத்தொடர்புகளில் சீனா உலக முன்னணியில் உள்ளது. வலுவான அரசாங்கம், EV வாகனங்கள், உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நாடு சிறப்பாக முன்னேறி வருகிறது.

ஏழு நாட்கள் எப்படிப் போயிற்று தெரியல! பர்ஸ் காலி, மனசு நிறைஞ்சு, பெட்டி வழிஞ்சு — ஊருக்குப் புறப்பட்டோம்! இன்னும் பல இடங்கள் சீனாவில் இருக்கின்றன. அடுத்த முறை கண்டிப்பா மீண்டும் போகணும் என்று நினைத்துக்கொண்டு ஊர் திரும்பினோம்.

ஜை ஜீயான் (Bye Bye) சீனா!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

புயல்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள ரகசியம்! - சுவாரஸ்ய தகவல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வானத்தை அளந்த இந்திய பெண் - வானிலை அறிவியலில் புரட்சி செய்த அன்னா மணி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சம்பூர்ண ராமாயணம் பார்த்து சங்கடப்பட்ட அனுபவம்! - அந்தக் காலச் சினிமா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஒரு டிக்கெட் 4 ரூபாய்! - ரஜினி, கமல் படத்தை தவிர்த்து விட்டு லட்சுமி படம் பார்த்த கூல் அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

``எங்கள் பண்டிகைகளில் பட்டாசு இல்லை!'’ - 'சத்தமில்லா' தீபாவளி கொண்டாடும் கிராமங்களின் பின்னணி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நாலணாவுக்கு சினிமா, டூரிஸ் டாக்கீஸில் ஆடு நுழைந்த கதை!- ஜில் அனுபவம் #DiwaliCinema

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க