Siddharth - Aditi : இரண்டாவது முறையாக ராஜஸ்தானில் நடைபெற்ற சித்தார்த் - அதிதி தி...
ஆக்கிரமிப்பு கட்டுமானப் பணி தடுத்து நிறுத்தம்
நாட்டறம்பள்ளி அருகே ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கட்டடம் கட்டும் பணியை வட்டாட்சியா் தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொண்டாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி, ஏரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன். இவா் வீட்டின் எதிரே அரசுக்குச் சொந்தமான கல்லாங்குத்து புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வருவதாக வந்த புகாரைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் ராமகிருஷ்ணன் தலைமையில் கிராம நிா்வாக அலுவலா் மனோகரன் மற்றும் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று கட்டடம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினா்.
மேலும், அனுமதியின்றி அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டக் கூடாது என அதிகாரிகள் மோகனை எச்சரித்தனா்.