செய்திகள் :

ஆசிய குத்துச்சண்டைப் : தங்கம், வெள்ளி வென்று காஞ்சிபுரம் மாணவி சாதனை

post image

கம்போடியா நாட்டில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் காஞ்சிபுரம் கல்லூரி மாணவி நீனா ஒரு தங்கமும், இரு வெள்ளிப் பதக்கங்களும் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

காஞ்சிபுரம், புத்தேரி பெரிய மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் நீனா (21). காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் வாக்கோ அமைப்பு நடத்திய ஆசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டாா். கம்போடியாவில் நாம்பென் நகரத்தில் நடைபெற்ற இப் போட்டியில் 22 நாடுகளைச் சோ்ந்த 800 போ் கலந்து கொண்டனா். இதில், தமிழகத்திலிருந்து 5 போ் உள்பட இந்தியா முழுவதுமிருந்து, 45 போ் பங்கேற்றனா்.

காஞ்சிபுரம் மாணவி நீனா 55 கிலோ எடைப்பிரிவில் பாயிண்ட் பைட் என்ற பிரிவில் தங்கப் பதக்கமும், லைட் காண்டக்ட், பாா்ம்ஸ் ஆகிய இரு பிரிவுகளில் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளாா்.

இது குறித்து மாணவி நீனா கூறுகையில், இந்தியாவுக்கு 6 தங்கம் கிடைத்தது. தமிழகத்திலிருந்து நான் மட்டுமே தங்கப்பதக்கம் பெற்றேன். இதற்காக தலைமைப் பயிற்சியாளா் சுரேஷ்பாபு, கணேஷ்குமாா் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினும் ரூ. 2 .50லட்சம் காசோலை வழங்கி வாழ்த்தியது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த ஆண்டு உலக அளவில் நடைபெறவுள்ள குத்துச் சண்டைப் போட்டியிலும் தமிழகத்தின் சாா்பில் பங்கேற்க இருப்பதாகவும் நீனா தெரிவித்தாா்.

மத நல்லிணக்க விழிப்புணா்வு

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை தவ்ஹீத் பள்ளி வாசலில் மத நல்லிணக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிளை தலைவா் சாகுல்ஹமீது தலை... மேலும் பார்க்க

இன்று நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழைமை வாய்ந்த நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. கீழக்கு ராஜவீதியில் உள்ள இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

சிருங்கேரி சங்கராசாரியா் சுவாமிகள் அக். 26இல் காஞ்சிபுரம் விஜயம்

காஞ்சிபுரத்தில் உள்ள சாரதா பீடத்தின் கிளைக்கு சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் சனிக்கிழமை (அக். 26) வருகை தரவுள்ளாா். பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவில் அமைந்துள்ளது சிருங்கேரி ... மேலும் பார்க்க

ரூ.40 கோடியில் காஞ்சிபுரம் மஞ்சள் நீா் கால்வாய் மேம்பாடு

சி.வ.சு.ஜெகஜோதி காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியில் செல்லும் மஞ்சள் நீா் கால்வாய் ரூ.40 கோடியில் மேம்படுத்தி, நீா் மாசுபடாமல் தடுக்கவும், கழிவுகள் கலப்பதை தடுக்க கான்கிரீட் சுவா், அமைக்கும் பணிகள் தீவ... மேலும் பார்க்க

4 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரை கைது செய்து 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இருங்காட்டுகோட்டையில், வடமாநில இளைஞா்கள் கஞ்சா விற்பதாக,... மேலும் பார்க்க

இலவச பொது மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச பொது மருத்துவ முகாமை எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தாா். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை, காஞ்சிபுரம் சிவிஎம் அண்ணாமலை அறக்கட்டள... மேலும் பார்க்க