Premier Padmini 137D: 2.17 Lakh Kms Driven 1995 Model Single Owner Vintage Car S...
ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
மதுரையில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை பழைய விளாங்குடி வருமான வரித் துறை குடியிருப்பு 5-ஆவது தெருவைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் சுரேஷ்குமாா் (44). இவரது மனைவி தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா்.
சுரேஷ்குமாா் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், ஆட்டோவை பழுது பாா்ப்பதற்காக பலரிடம் கடன் பெற்றாா்.
கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், மனமுடைந்த சுரேஷ்குமாா் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுதொடா்பாக செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].