செய்திகள் :

ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தங்க மோதிரம் பரிசளித்த அஜித் ரசிகர்கள்!

post image

குட் பேட் அக்லி டீசருக்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் ரசிகர்கள் தங்க மோதிரத்தைப் பரிசளித்துள்ளனர்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் நேற்று (பிப். 28) இரவு வெளியானது.

இந்த டீசரில் தீனா, பில்லா தோற்றங்களில் அஜித் காட்சியளித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இதனால், எதிர்பார்த்ததைவிட குட் பேட் அக்லி டீசர் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது.

இதையும் படிக்க: 2.5 கோடி பார்வைகளைக் கடந்த குட் பேட் அக்லி டீசர்!

மேலும், யூடியூபில் 3 கோடி (30 மில்லியன்) பார்வைகளை நெருங்கவுள்ளது. மங்காத்தாவுக்குப் பின் அஜித் ரசிகர்களுக்கான படமாக இது உருவாகியிருப்பதால் படம் வணிக ரீதியாகவும் சில சாதனைகளைச் செய்யும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, மதுரையிலிருந்து சென்னையிலுள்ள பிரபல திரையரங்கில் டீசர் வெளியீட்டைக் காண வந்த அஜித் ரசிகர்கள் டீசர் வெளியீட்டுக்குப் பின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 2 பவுன் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியிருக்கின்றனர்.

தாங்கள் எப்படியெல்லாம் நடிகர் அஜித்தைக் காண விரும்பினோமோ அப்படி குட் பேட் அக்லி படத்தை உருவாக்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் டிராகன்!

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் ரூ. 100 கோடி வசூலை நெருங்கவுள்ளது.இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்.21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளி... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி டீசர் சாதனை!

குட் பேட் அக்லி டீசர் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் புதிய சாதனையைப் படைத்துள்ளது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் நேற்று (பிப். ... மேலும் பார்க்க

தமிழில் பைரதி ரணகல்!

நடிகர் சிவராஜ்குமார் நடித்த பைரதி ரணகல் திரைப்படம் தமிழ், மலையாள மொழிகளுக்காக பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.கீதா பிக்சர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் கீதா சிவராஜ்குமார் தயாரிப்பில், இயக்குநர் நாரதன... மேலும் பார்க்க

கிங்ஸ்டன் - டைட்டில் பாடல் வெளியீடு!

நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி நடித்துள்ள கிங்ஸ்டன் படத்தின் டைட்டில் பாடல் வெளியாகியுள்ளது. நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும்... மேலும் பார்க்க

தாமதமாக வெளியான சப்தம்!

சப்தம் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகாததால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் 'சப்தம்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். தனது அறிம... மேலும் பார்க்க

பூஜா ஹெக்டே கைவசம் இத்தனை தமிழ்ப் படங்களா?

நடிகை பூஜா ஹெக்டேவின் நடிப்பில் அடுத்தடுத்த தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே முகமுடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆனால், அப்படம் சரியா... மேலும் பார்க்க