சிட்டி யூனியன் வங்கி-சிஎஸ்கே இணைந்து புதிய கடன் அட்டை அறிமுகம்
ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் டிராகன்!
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் ரூ. 100 கோடி வசூலை நெருங்கவுள்ளது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்.21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இன்றையகால இளைஞர்களுக்கு ஏற்றப்படி கதையும் காட்சிகளும் இருந்ததால் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால், முதல் மூன்று நாள்களிலேயே உலகளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.
இதையும் படிக்க: குட் பேட் அக்லி டீசர் சாதனை!
இந்தியளவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவுள்ளது.
இந்த நிலையில், இதுவரை இப்படம் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார இறுதிக்குள் ரூ. 100 கோடியை வசூலிக்கலாம் எனத் தெரிகிறது.