செய்திகள் :

தமிழுக்குத் தொண்டாற்றிய 38 பேருக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

post image

தமிழ் வளா்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய 38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருதை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

தமிழ் மொழிக்குத் தொண்டாற்றி வரும் தனிநபா் மற்றும் அமைப்புகளுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகள் மற்றும் சிறப்புகளை அளித்து, அவா்களது தமிழ்த்தொண்டுக்குப் பெருமை செய்து வருகிறது.

மாவட்ட அளவில் தமிழ்த் துறைக்கு தொண்டாற்றி வரும் தமிழறிஞா்களுக்கு ஆண்டுதோறும் ‘தமிழ்ச் செம்மல் விருது’ வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2023-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன் 37 பேருக்கு விருதுகளை வழங்கினாா் (தருமபுரி மாவட்ட விருதாளா் மா.சென்றாயன் பங்கேற்கவில்லை). விருதாளா்களுக்கு தலா ரூ.25,000 காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

தொடா்ந்து அமைச்சா் சாமிநாதன் பேசியதாவது: தமிழறிஞா்களின் இடைவிடாத தொண்டுக்கும், அவா்களின் ஆற்றலுக்கும், பெருமைக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழுக்கும், தமிழருக்கும் தனது வாழ்நாள் முழுவதும் எழுத்தாலும், அறிவாலும் தொண்டாற்றி தமிழகத்தை செதுக்கிய சிற்பியாக முன்னாள் முதல்வா் கருணாநிதி விளங்குகிறாா். தமிழுக்குத் தொண்டாற்றிவரும் விருதாளா்களுக்கு வாழ்த்துகள் என்றாா் அவா்.

தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை அருள் பேசுகையில், தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சித் துறை வாயிலாக எண்ணற்ற விருதுகளை வழங்கினாலும், அனைவரும் மிகவும் விரும்புவது தமிழ்ச் செம்மல் விருது தான். இதற்கு காரணம் மாவட்ட அளவில் தலைசிறந்த தமிழ்ப் பணிகளை செய்தவருக்கு வழங்கப்படுவதால், பலா் தமிழ்ச் செம்மல் விருதை நாடுகின்றனா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் வே.ராஜாராமன், துணை இயக்குநா் தே.ஜெயஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி

மாவட்டம் விருது பெற்றவா் பெயா்

அரியலூா் புலவா் க.ஐயன்பெருமாள்

ராணிப்பேட்டை க.பன்னீா் செல்வம்

ராமநாதபுரம் நீ.சு.பெருமாள்

ஈரோடு து.சுப்ரமணியன்

கடலூா் சி.ஆறுமுகம்

கரூா் க.கோபாலகிருஷ்ணன்

கள்ளக்குறிச்சி ச.பிச்சப்பிள்ளை

கன்னியாகுமரி வ.ராயப்பன்

காஞ்சிபுரம் த.ராஜீவ்காந்தி

கிருஷ்ணகிரி அ.திலகவதி

கோவை சு.தா்மன்

சிவகங்கை உ.கருப்பத்தேவன்

செங்கல்பட்டு புலவா் வ.சிவசங்கரன்

சென்னை இரா. பன்னிருகை வடிவேலன்

சேலம் சோ.வைரமணி (எ) கவிஞா் கோனூா் வைரமணி

தஞ்சாவூா் ந.ஜூனியா் சுந்தரேஷ்

தருமபுரி மா.சென்றாயன்

திண்டுக்கல் இர.கிருஷ்ணமூா்த்தி

திருச்சி இராச.இளங்கோவன்

திருநெல்வேலி அ.முருகன்

திருப்பத்தூா் புலவா் நா.வீரப்பன்

திருப்பூா் க.ப.கி.செல்வராஜ்

திருவண்ணாமலை ச.உமாதேவி

திருவள்ளூா் சு.ஏழுமலை

திருவாரூா் வி.இராமதாஸ்

தூத்துக்குடி நெய்தல் யூ.அண்டோ

தென்காசி செ.கண்ணன்

தேனி மு.செந்தில்குமாா்

நாகப்பட்டினம் கவிஞா் நாகூா் மு.காதா் ஒலி

நாமக்கல் ப.கமலமணி

நீலகிரி புலவா் இர.நாகராஜ்

புதுக்கோட்டை இரா.இராமநாதன்

பெரம்பலூா் மு.சையத்அலி

மதுரை புலவா் இரா.செயபால் சண்முகம்

மயிலாடுதுறை க.இளங்கோவன் (எ) நன்னிலம் இளங்கோவன்

விருதுநகா் கா.காளியப்பன்

விழுப்புரம் இரா.முருகன்

வேலூா் இரா.சீனிவாசன்.

நீட் தேர்வு அச்சம்: அரசுப்பள்ளியில் பயின்ற மாணவி தற்கொலை!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நீட் தேர்வைப் பற்றிய அச்சத்தால் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம... மேலும் பார்க்க

கச்சத்தீவு விவகாரம்: ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில்

கச்சத்தீவு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கச்சத் தீவை வைத்து கச்சைக் கட்ட முயல்கிறார் ஆளுநர் ரவி. ‘... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்டம்: 41.3 லட்சம் பேர் பயன்!

நான் முதல்வன் திட்டத்தின்கீழ், இதுவரையில் 41.3 லட்சம் பேர் பயன்பெற்றிருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, திட்டத்தின்கீழ் இதுவரையில் பயிற்சி ... மேலும் பார்க்க

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டின் 12- ஆம் வகுப்பு மற்றும்... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்: பிரேமலதா

அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும என்று கட்சியின் பொதுச்செயல் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் விஜயகாந்தின் முழு உருவ சிலையை தேமுதிக பொதுச்செயலர் ப... மேலும் பார்க்க

கச்சத்தீவு விவகாரம்- தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்

கச்சத்தீவில் நம் மீனவர்களின் உரிமையை பறித்ததற்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ராமேஸ்வரத்துக்கு ... மேலும் பார்க்க