செய்திகள் :

கச்சத்தீவு விவகாரம்- தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்

post image

கச்சத்தீவில் நம் மீனவர்களின் உரிமையை பறித்ததற்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன். நமது வறியநிலை மீனவர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு காரணமான மிகவும் உணர்திறனற்ற 1974 ஆம் ஆண்டு அநியாயமான ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.

கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன. அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது.

ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: கட்சியினரை சந்தேகிக்கும் குடும்பத்தினர்!

இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும்.

இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும், ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, 1974-இல் நடந்த தவறுக்கு சம பொறுப்பு, அன்றைய மத்திய ஆட்சி கூட்டணியில் இருந்த இன்று மாநிலத்தை ஆளும் கட்சிக்கும் உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா திங்கள்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடியேற்றத்தையொட்டி திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மண... மேலும் பார்க்க

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில் நத்தம் மாரியம்மன் கோயில் ஆகும். இக்கோயிலின் முக்கிய விழாவான மாசிப் பெருந் திருவிழ... மேலும் பார்க்க

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகு... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டத்தில் 110 மி.மீ. மழை பதிவு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 110 மி.மீ. மழை பதிவானது. தென் மாவட்டங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 3) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் கனிமொழி வலியுறுத்தல்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு எந்த அடிப்படையில் நடைபெறும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் எக்ஸ்... மேலும் பார்க்க

‘தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும்’

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அக் கட்சியின் அகில இந்திய மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா். புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக ... மேலும் பார்க்க