செய்திகள் :

நீட் தேர்வு அச்சம்: அரசுப்பள்ளியில் பயின்ற மாணவி தற்கொலை!

post image

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நீட் தேர்வைப் பற்றிய அச்சத்தால் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தாதாபுரம் பகுதியைச் சேர்ந்த இந்துமதி(19) என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அரசுப்பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் 600-க்கு 520 மதிப்பெண்களைப் பெற்ற மாணவி இந்துமதி, கடந்த ஆண்டு நீட் தேர்வில் 350 மதிப்பெண் எடுத்தும், அவருக்கு மருத்துவம் பயில கல்லூரியிகளில் இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட வேண்டும் என தீவிரமாக படித்து வந்துள்ளார் இந்துமதி.

இதனிடையே, நீட் தேர்வில் ஒருவேளை இம்முறையும் மதிப்பெண் அதிகம் பெற்றும் மருத்துவம் பயில இடம் கிடைக்கவில்லையெனில் என்ன செய்வது? என்ற குழப்பம் மாணவியிடம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து வந்த இந்துமதி, இந்த அச்சத்தால் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தற்கொலை எண்ணத்தால் 15 வயது முதல் 29 வயதில் உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுப்பது அவசியம். இதற்காக 104 ஆலோசனை மையம் - தற்கொலை தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மார்ச் 8 முதல் பயன்பாட்டுக்கு வரும் பிங்க் ஆட்டோ!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது.சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வ... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஏப்ரல் வரைதான் இருக்குமாம்!

கடந்த டிசம்பர் மாதம் முதல் காய்கறிகளின் விலை சதத்தைத் தொட்டுவிடுவோம் என்று மிரட்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வெங்காயம், தக்காளி என அனைத்துக் காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.பிப்ரவரி... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், எங்கள் கட்சிக்கு அழைப்பு... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையம் அருகே தமிழ்நாடு ஹஜ் இல்லம்!

சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டத்தில் ரூ. 82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டால... மேலும் பார்க்க

நாகைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

நாகையில் ரூ.82.9 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். திமுக அரசின் திட்டப் பணிகளைப் பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தி வருகிறார். ... மேலும் பார்க்க

சிதம்பரம்: பிரபல கொள்ளையன் கைது

சிதம்பரம் அண்ணாமலைநகரில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் பிரபல கொள்ளையனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள விபீஷணபுரம் கோவிந்தசாமி நகரில் வசிக்கின்ற ப... மேலும் பார்க்க