நாகைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
நாகையில் ரூ.82.9 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
திமுக அரசின் திட்டப் பணிகளைப் பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தி வருகிறார். அப்போது அவர் நாகை மாவட்டத்திற்கு ஆறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
நாகைக்கு 6 முக்கிய அறிவிப்பு
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் தரம் உயர்த்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் ரூ.280 கோடியில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும். கீழ்வேளூர், வேதாரண்யம் வட்டங்களில் கால்வாய்கள், வடிகால்கள் மறுசீரமைக்கப்படும்.
ரூ.250 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்
நாகை நகராட்சி கட்டடம் ரூ.4 கோடி செலவில் சீரமைக்கப்படும்.
சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும்.
நாகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது.
தெற்குபொய்கைநல்லூர், கோடியக்கரையில் 3 பல்நோக்கு பேரிடர் மையங்கள் கட்டப்படும்.
நாகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ரூ.2 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். நாகையில் புதுமைப் பெண் திட்டம் மூலம் 7,469 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. நாகை மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
இலங்கை கடற்படையின் அடக்குமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு பார்க்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் தமிழ்க மீனவர்கள் 3656 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முன்னேறி இருப்பதற்குக் காரணம் இரு மொழி கொள்கைதான் என மத்திய அரசுக்குத் தெரியும். கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்மொழியின் வளர்ச்சி சிலர் கண்களை உறுத்துகிறது. போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்க மத்திய அரசு ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.
தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் தீர்வு காணவேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது என்று அவர் பேசினார்.