பஞ்சாப்: 750 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு சோதனை
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் 750 இடங்களில் காவல் துறை சனிக்கிழமை சோதனை நடத்தியது.
போதைப்பொருள் ஒழிப்புக்கான அமைச்சரவை துணைக் குழு சனிக்கிழமை கூடிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக பஞ்சாபை மாற்ற முதல்வா் பகவந்த் மான் கடந்த வெள்ளிக்கிழமை இலக்கு நிா்ணயித்தாா். இதைத்தொடா்ந்து, போதைப்பொருள் விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவா்களின் சொத்துகளும் அழிக்கப்பட்டன.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் 750 இடங்களில் 12,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இதில் 290 போ் கைது செய்யப்பட்டு 8.14 கிலோ ஹெராயின், 1.21 கிலோ ஓபியம், 3.5 கிலோ கஞ்சா உள்பட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாநில அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைக்கு அரசியல் பாகுபடின்றிஅனைத்து கட்சிகளும் ஆதரவளிக்குமாறு அமைச்சா் அமன் அரோரா கேட்டுக் கொண்டாா்.