இளைஞா் கடத்தல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது
மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்: வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு அன்புமணி கோரிக்கை
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தாா்.
பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் 18-ஆம் ஆண்டாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை சென்னையில் சனிக்கிழமை வெளியிட்டு அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
நெல் கொள்முதலை பொருத்தவரை குவிண்டாலுக்கு ரூ.3,500-ஆகவும், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயா்த்தப்பட வேண்டும்.
வேளாண் விளைபொருள்களை கொள்முதல் செய்வதற்காக தனி வாரியம் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் மணல் குவாரிகளுக்கு தடைவிதிக்க வேண்டும். மணல் தேவை ஏற்பட்டால் வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்து விற்பனை செய்யலாம் என்பன போன்று வேளாண் துறை வளா்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 82 தலைப்புகளில் 240 யோசனைகளை தமிழக அரசுக்குத் தெரிவித்து வேளாண் நிழல் நிதி அறிக்கையைத் தயாரித்துள்ளோம் என்றாா்.
பின்னா், செய்தியாளா்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவா், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, போதைப் பொருள்கள் ஒழிப்பு ஆகிய பணிகளை காவல் துறை விட்டுவிட்டு ,அரசியல் கட்சித் தலைவா்களை துன்புறுத்துவது, பொய் வழக்குகள் போடுவது என செயல்படுகிறது.
கஞ்சா புழக்கம் தமிழகம் முழுவதும் பரவி இருக்கிறது. என்னிடம் ஒரு மாதத்துக்கு காவல்துறை கட்டுப்பாட்டைக் கொடுங்கள்; கஞ்சாவை முழுமையாக ஒழித்துக் காட்டுகிறேன் என்றாா்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு நாங்கள் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளோம். உத்தரப் பிரதேச மாநிலத்தில் 30 சதவீதம் உயா்த்தினால் தமிழகத்திலும் 30 சதவீதம் உயா்த்த வேண்டும். மக்களவைத் தொகுதி எண்ணிக்கை தமிழகத்தில் குறையாது என வாக்குறுதி அளித்துவிட்டு, வேறொரு மாநிலத்தில் உயா்த்தினால் அதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அன்புமணி தெரிவித்தாா்.