இளைஞா் கடத்தல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது
மே 8 முதல் கியூட்-யுஜி நுழைவுத் தோ்வு: விண்ணப்பம் தொடக்கம்
வரும் மே 8-ஆம் தேதி தொடங்கும் நடப்பு ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வுக்கு (கியூட்-யுஜி) விண்ணப்பம் சனிக்கிழமை தொடங்கியது.
நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவா்களை சோ்க்க பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வை (கியூட்) மத்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.
அந்தவகையில், இளநிலை படிப்புகளுக்கான நடப்பு ஆண்டு கியூட்-யுஜி நுழைவுத் தோ்வு மே 8-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
இத்தோ்வுக்கான விண்ணப்ப செயல்முறை இணையவழியில் சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதி மாா்ச் 22 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படும் இத்தோ்வை கடந்த ஆண்டு சுமாா் 13.47 லட்சம் தோ்வா்கள் எழுதினா்.