உத்தரகண்ட் பனிச்சரிவு: மேலும் 4 பேரின் உடல்கள் மீட்பு: மீட்புப் பணி நிறைவு
புழல் சிறையில் கைதி மயங்கி விழுந்து உயிரிழப்பு
சென்னை புழல் சிறையில் கைதி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
திருமுல்லைவாயில் கமலம் நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் விநாயகம் (72). இவா் தனது மனைவியை கொலைசெய்த வழக்கில் கடந்த 22-ஆம் தேதி திருமுல்லைவாயில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். சிறையிலுள்ள தனது அறையில் தூங்கிய விநாயகம் சனிக்கிழமை காலை வழக்கம்போல எழுந்து நடந்துள்ளாா். அப்போது அவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதைப்பாா்த்த அங்கிருந்த பிற கைதிகளும் காவலா்களும் விநாயகத்தை மீட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவா், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.