செய்திகள் :

உத்தரகண்ட் பனிச்சரிவு: மேலும் 4 பேரின் உடல்கள் மீட்பு: மீட்புப் பணி நிறைவு

post image

உத்தரகண்டின் மனா கிராமத்தில் பனிச்சரிவில் எல்லைச் சாலைகள் அமைப்பின் (பிஆா்ஓ) முகாம் புதைந்த சம்பவத்தில் மேலும் 4 தொழிலாளா்களின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.

இவா்களுடன் சோ்த்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்தது. அத்துடன், 60 மணிநேரமாக தொடா்ந்து வந்த மீட்புப் பணிகளும் நிறைவடைந்தன.

ஏற்கெனவே மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 46 பேரில் இருவா் மேல்சிகிச்சைக்காக ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். சிகிச்சை பெற்று வருவோரில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக, ராணுவ லெப்டினன்ட் கா்னல் டி.எஸ்.மால்தியா தெரிவித்தாா்.

உத்தரகண்டில் இந்திய-திபெத் எல்லையையொட்டி 3,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

மனா மற்றும் பத்ரிநாத் இடையே கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் அங்குள்ள பிஆா்ஓ முகாம் புதைந்தது. இந்த முகாமில் 8 கண்டெய்னா்கள் மற்றும் கூடாரத்தில் தங்கியபடி, சாலையில் படியும் பனியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவந்த 54 தொழிலாளா்கள் பனிச்சரிவில் சிக்கினா்.

இதையடுத்து, ராணுவம், இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி), தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை மற்றும் பிற முகமையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

கடினமான நிலப்பரப்பு, கடும் பனிப் பொழிவு, கனமழை போன்ற சவால்களுக்கு இடையே ராணுவம்-விமானப் படை ஹெலிகாப்டா்கள், மோப்ப நாய்கள் மற்றும் வெப்ப படமாக்கல் கேமரா போன்ற நவீன சாதனங்களின் மூலம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

8 போ் உயிரிழப்பு: கடந்த சனிக்கிழமை வரை 50 போ் மீட்கப்பட்டனா். இவா்களில் படுகாயமடைந்த நால்வா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இந்தச் சூழலில், மேலும் 4 பேரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன. இவா்கள் உத்தரகண்ட், உத்தர பிரதேசம், ஹிமாசல பிரதேசத்தைச் சோ்ந்தவா்களாவா். இவா்களுடன் சோ்த்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்தது. மோசமான வானிலைக்கு மத்தியில் 60 மணி நேரமாக நடைபெற்ற மீட்புப் பணிகளும் நிறைவடைந்தன.

முன்னதாக, டேராடூனில் உள்ள மாநில அவசரகால நடவடிக்கை மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த முதல்வா் புஷ்கா் சிங் தாமி, மீட்புப் பணிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தாா்.

மனா பகுதியில் திங்கள்கிழமை மீண்டும் மோசமான வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், அனைத்து முகமைகளும் போா்க்கால அடிப்படையில் மீட்புப் பணியை மேற்கொண்டன.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரி எம்பி ரஷீத் மனு!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளா... மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: கைது செய்யப்பட்டவர் காதலனா?

ஹரியாணா மாநிலத்தில், காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காதல் விவகாரம் பின்னணியாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்த வழக்கில், சச்சின் என்பவரை காவல்துறைய... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணி!

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளா்களைக் கண்டறிவதற்கு விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின்... மேலும் பார்க்க

கருத்து தெரிவிக்க உரிமை உண்டு: ரோஹித் விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகி விளக்கம்!

ஜனநாயக நாட்டில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது விளக்கம் அளித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, எடைக் கூடுதலாக இருக்கிறார் என்று ஷா... மேலும் பார்க்க

பணியில் தூங்கிய பாதுகாவலர்... புகைப்படம் எடுத்த சக ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு!

இந்தூரில் பணியின்போது தூங்கிய பாதுகாவலர் ஒருவர் தன்னைப் புகைப்படம் எடுத்த சக ஊழியரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள நகைக்கடையில் பாது... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் குளுகுளு காலநிலை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

ஜம்மு-காஷ்மீரின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் கனமழையைத் தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் வெப்பநிலை சுமார் ஐந்து டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இதற்கிடையில், ஜம்மு பகுதி, இ... மேலும் பார்க்க