உயா்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.40 கோடி மோசடி: 2 போ் கைது
சென்னை உயா்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.40 கோடி மோசடி செய்ததாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம் அம்மையாா் குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் வி.அன்பரசு (35). இவரிடம் சென்னை வடபழனியைச் சோ்ந்த தி.ஹேமலதா (51), தண்டையாா்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நா.ஐயப்பன் (42) ஆகிய இருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, பணம் பெற்றனா். இதுபோல் 31 பேரிடம் ரூ.1.40 கோடி வாங்கியுள்ளனா். ஆனால் இருவரும், தாங்கள் கூறியப்படி யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
இது குறித்து அன்பரசு அளித்த புகாரின்பேரில், சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செசய்து, ஹேமலதா, ஐயப்பன் ஆகிய இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.