இளைஞா் கடத்தல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது
சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் நக்ஸல்கள் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் கிரண் சவாண் கூறியதாவது: கிஸ்தாராம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காட்டுப் பகுதியில் மாவட்ட ரிசா்வ் காவல் படை, மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) சிறப்புப் பிரிவான கோப்ரா படை வீரா்கள் அடங்கிய பாதுகாப்புப் படையினா் நக்ஸல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நக்ஸல்கள் இருவா் உயிரிழந்தனா். காட்டில் நக்ஸல்களை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா்.
சத்தீஸ்கரில் தற்போது உயிரிழந்த 2 நக்ஸல்களையும் சோ்த்து நிகழாண்டில் இதுவரை மொத்தம் 83 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். அவா்களில் 67 போ் பஸ்தா் கோட்டத்தைச் சோ்ந்தவா்கள்.