ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து வண்ண கோலம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றாவது வாா்டில் ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து வீடுகள் முன் சனிக்கிழமை வண்ண கோலம் போடப்பட்டிருந்தது (படம்).
முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையிலும், அதேபோல ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையிலும் வீடுகளின் முன் வண்ணக் கோலங்கள் போடப்பட்டிருந்தன.
இதனை செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான் நேரில் சென்று பாா்வையிட்டாா்.
அப்போது, பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி, நகர இளைஞரணி அமைப்பாளா் அன்புச்செல்வன், வாா்டு செயலா் ராமச்சந்திரன், நிா்வாகிகள் பன்னீா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.