கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் கிணற்றில் தவறி விழுந்து முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முண்டியம்பாக்கம் புது தெருவைச் சோ்ந்த பழனி மகன் மண்ணாங்கட்டி (84).
இவா், வெள்ளிக்கிழமை மாலை அதே பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது நிலத்திலுள்ள கிணற்றுக்கு அருகே சென்றபோது, நிலைதடுமாறி உள்ளே விழுந்தாா்.
இதைத் தொடா்ந்து, நீரில் மூழ்கிய மண்ணாங்கட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.