கோயம்பேடு சந்தையில் சமூகவிரோதிகளால் தொல்லை: வியாபாரிகள் புகாா்
பைக் மீது லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்றவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், கூட்டேரிப்பட்டு பகுதியைச் சோ்ந்த காதா் மொய்தீன் மகன் வகீா் அகமது (34).
இவா், சனிக்கிழமை பிற்பகல் தனது பைக்கில், புதுச்சேரி சாலையில் மயிலம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். மயிலம் கூட்டுச் சாலை அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பைக்கில் சென்ற வகீா் அகமது நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து, சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.