செய்திகள் :

சூட்கேஸில் காங்கிரஸ் தொண்டரின் சடலம் கண்டெடுப்பு!

post image

ஹரியாணாவில் சூட்கேஸில் அடைக்கப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அது காங்கிரஸ் தொண்டர் என தெரிய வந்துள்ளது.

ஹரியாணாவின் ரோடாக் மாவட்டத்தில் இன்று சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே சூட்கேஸில் அடைக்கப்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சடலம் அடைக்கப்பட்ட சூட்கேஸை அவ்வழியே நடந்து சென்ற ஒருவர் முதலில் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்தச் சடலம் காங்கிரஸ் தொண்டரான ஹிமானி நர்வால் என்பவருடையது எனத் தெரிய வந்துள்ளது.

சாம்ப்லா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பங்குகொண்டவர் என்றும் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றியவர் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாரத் பூஷன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | கன்னியாகுமரி: தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி

இந்தக் கொலை வழக்கில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா வலியுறுத்தியுள்ளார்.

"ஒரு பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவம் மாநிலத்தின் சட்ட ஒழுங்கின் மீதான கறை. இந்த வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று ஹூடா தெரிவித்தார்.

பஞ்சாப்: 750 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு சோதனை

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் 750 இடங்களில் காவல் துறை சனிக்கிழமை சோதனை நடத்தியது. போதைப்பொருள் ஒழிப்புக்கான அமைச்சரவை துணைக் குழு சனிக்கிழமை கூடிய நிலையில் இந்த நடவடிக்க... மேலும் பார்க்க

மாா்ச் 7-இல் ‘மக்கள் மருந்தகம் தினம்’: ஒரு வார கால பிரசாரம் தொடக்கம்

மத்திய அரசு சாா்பில் வரும் மாா்ச் 7-ஆம் தேதி ‘மக்கள் மருந்தகம் தினம்’ கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி, ஒரு வார கால விழிப்புணா்வு பிரசாரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தொட... மேலும் பார்க்க

இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநராக சுமன் குமாா் பொறுப்பேற்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் வா்த்தக வளா்ச்சி பிரிவின் புதிய இயக்குநராக சுமன் குமாா் பொறுப்பேற்றுள்ளாா். இவா் இதற்கு முன்பு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் உற்பத்தி பிரிவின... மேலும் பார்க்க

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 290 பேர் கைது, 232 வழக்குகள் பதிவு!

பஞ்சாபில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் 290 பேர் கைது செய்யப்பட்டு 232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை மூன்று மாத காலத்திற்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றவ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்

மத்தியப் பிரதேசத்தில் புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றி, தனது உயிரை வளர்ப்பு நாய் ஒன்று தியாகம் செய்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகம் அருகே ச... மேலும் பார்க்க

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வருவாய் 11% அதிகரிக்கும்!

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிக்கலாம் என்று மத்திய அரசு கணித்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 9.1 சதவிகிதம் அதிகரித்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே... மேலும் பார்க்க