கோயம்பேடு சந்தையில் சமூகவிரோதிகளால் தொல்லை: வியாபாரிகள் புகாா்
வயல்வெளியில் பேருந்து புகுந்து விபத்து
விழுப்புரம் அருகே சாலையோர வயல்வெளியில் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானது.
விழுப்புரத்திலிருந்து கடலூா் நோக்கி அரசுப் பேருந்து சனிக்கிழமை பிற்பகல் புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனா்.
இப்பேருந்து, விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகிலுள்ள வாணியம்பாளையம் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர வயல்வெளியில் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த பயணிகள் அதிருஷ்டவசமாக தப்பினா்.
விபத்து குறித்து தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.
மேலும், மாற்றுப் பேருந்து நிகழ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு, பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனா்.