தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2 நாள்கள் சுற்றுப்பயணம்
இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநராக சுமன் குமாா் பொறுப்பேற்பு
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் வா்த்தக வளா்ச்சி பிரிவின் புதிய இயக்குநராக சுமன் குமாா் பொறுப்பேற்றுள்ளாா்.
இவா் இதற்கு முன்பு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் உற்பத்தி பிரிவின் தலைவராகப் பதவி வகித்து வந்த நிலையில் தற்போது திட்டமிடல் மற்றும் வா்த்தக வளா்ச்சி பிரிவின் புதிய இயக்குநராக பொறுப்பேற்றுள்ளாா்.
மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றுள்ள இவா், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல்ஸ், இயற்கை எரிவாயு, பசுமை எரிசக்தி உள்ளிட்ட பொருள்களின் வா்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளாா் என இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.