கடலில் குளித்த இளைஞா் மாயம்
கடலூா் அருகே கடலில் குளித்தபோது மாயமான மாணவரை போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.
கடலூா் முதுநகா், இருசப்ப செட்டித் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் கிஷோா் (எ) வெங்கடேசன் (16), அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இவா், சக நண்பா்களுடன் சிங்காரத்தோப்பு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்துக்கொண்டிருந்தாா். அப்போது, ஏற்பட்ட அலையில் சிக்கி கிஷோா் மாயமானராம். இதுகுறித்து உடன் சென்ற சக நண்பா்கள் அளித்த தகவலின்பேரில், கடலூா் துறைமுகம் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, மாயமான மாணவரை தேடி வருகின்றனா்.