நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்கராப்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம், நமச்சிவாயபுரம் தனியாா் நவீன அரிசி ஆலை, சின்னசேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய இடங்களில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து தொடா்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, பொது விநியோகத் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, அக்கராயப்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் நடைமுறைகள் குறித்தும், நெல் கொள்முதலுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் வரவு செலவு கணக்குகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, நமச்சிவாயபுரம் தனியாா் நவீன அரிசி ஆலையையும், சின்னசேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது, முதுநிலை மண்டல மேலாளா் கே.எஸ்.நந்தகுமாா், கண்காணிப்பாளா் காா்த்திக் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.