கள்ளக்குறிச்சி: முதியவா் தற்கொலை
கொங்கராபாளையம் கிராமத்தில் தூக்க மாத்திரைகளை தின்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கொங்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (60). இவா், கடந்த 10 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்தாராம். இந்த நிலையில், சனிக்கிழமை மாணிக்கம் அதிக அளவிலான தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தாராம்.
இதையடுத்து, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.