இந்திய கம்யூ. நூற்றாண்டு விழா பேரவைக் கூட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா பேரவைக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பகண்டை கூட்டுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ரிஷிவந்தியம் ஒன்றியச் செயலா் தேவேந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள் முருகன், முனியப்பன், தங்கராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் மூ.வீரபாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் ராமசாமி, மாவட்ட துணைச் செயலா் சுப்பிரமணியன் ஆகியோா் பேசினா்.
நிகழ்வில், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் அப்பாவு, கோவிந்தராஜ் குமுதவள்ளி, சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.