திடீரென தீப்பற்றி எரிந்த காா்
கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த காா் சனிக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது.
புதுச்சேரியைச் சோ்ந்தவா் நெல்சன். இவா், தனது மனைவி மற்றும் நண்பா்கள் இருவருடன் புதுச்சேரியிலிருந்து ஏற்காடுக்கு சென்று கொண்டிருந்தாா்.
கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் அண்ணாநகா் நோக்கி சென்றபோது, இவா்களது காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.
உடனே, காரில் இருந்து அனைவரும் கீழே இறங்கி, கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
விரைந்து வந்த தீயணைப்புப் படையினா் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனா். எனினும், காா் முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தது.