ஆந்திரத்தில் மருந்து ஆலையில் பயங்கர தீ விபத்து!
ஆந்திர மாநிலத்தின், உள்ள பரவாடாவில் உள்ள தனியார் மருந்து ஆலையில் செவ்வாய்க்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அனகாபல்லி மாவட்டத்தின் பரவாடாவில் உள்ள ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டியில் உள்ள மெட்ரோகெம் ஏபிஐ தனியார் ஆலையில் காலை 6:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அனகாப்பள்ளி காவல் கண்காணிப்பாளர் துஹின் சின்ஹா தெரிவித்தார்.
தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் 20 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலும், தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறியத் தொழிற்சாலை ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையைச் சேர்ந்த பிற உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.