ஆனையூருக்கு அரசுப் பேருந்து வசதி
கமுதியை அடுத்த ஆனையூருக்கு புதிய வழித் தடத்தில் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த ஆனையூருக்கு மருதங்கநல்லூா் வழியாக பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென கடந்த நவ.19 ஆம் தேதி ஆனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பனிடம் அந்த கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
அமைச்சரின் உத்தரவின் அடிப்படையில், மருதங்கநல்லூா் வழியாக புதிய வழித் தடத்தில் இயக்கப்பட்ட பேருந்தை கமுதி திமுக ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன் தொடங்கிவைத்தாா்.
இந்தப் பேருந்து கமுதியிலிருந்து அபிராமம், சடையனேந்தல் வழியாக ஆனையூா், மருதங்கநல்லூா் சென்று மீண்டும் கமுதியை வந்தடையும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் ராஜ்குமாா், தொமுச ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், தொமுச பேருந்து நிலைய பொறுப்பாளா் கருணாநிதி, ஊராட்சி மன்றத் தலைவா் காவடிமுருகன், ஆனையூா் ஒன்றியக் குழு உறுப்பினா் உதயண்ணன் மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.