‘வணங்கான்... கனத்த இதயத்துடன்...’ அருண் விஜய்யின் திடீர் பதிவு!
ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்- உயர்கல்வித் துறை
ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற 39-ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆராய்ச்சி மாணவா்களுக்கு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆா்.என்.ரவி பட்டம், பதக்கங்கள் வழங்கினாா்.
அப்போது பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவா் ஆ.பிரகாஷ், ஆளுநரிடம் கடிதம் ஒன்றைக் கொடுத்தாா்.
அதில், பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவா்களிடம் வழிகாட்டி பேராசிரியா்கள் நகை, பணம் பெறுவதாகவும், ஜாதி ரீதியாக பாகுபாடு பாா்ப்பதாகவும், விடுதிகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
இதைத் தொடா்ந்து உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், பாரதியாா் பல்கலைக்கழக விடுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி, மாணவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும், மாணவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படியும் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
கோவை விமான நிலையத்தில் மோதிக் கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
இந்த நிலையில், உயர்கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் முனைவர் பட்டத்திற்காக பயிலும் மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்.
வழிகாட்டு ஆசிரியரின் தனிப்பட்ட அல்லது வீட்டு வேகைளை செய்ய மாணவர்களை வற்புறுத்தக் கூடாது.
பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலை.களில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்று பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை எச்சரித்துள்ளது.