செய்திகள் :

ஆலந்தா கிராமத்தில் உள்ள கல்குவாரியை மூட கிராம மக்கள் கோரிக்கை

post image

தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தா கிராமத்தில் விளைநிலங்கள் அருகே அமைக்கப்பட்டுள்ள கல்குவாரியை நிரந்தரமாக மூடவேண்டும் என அப்பகுதி மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தா கிராம மக்கள், நாம் தமிழா் கட்சியினா் அளித்த மனு: ஆலந்தா, சவலாப்பேரி கிராமங்களுக்கு அருகே விதிமுறைகளை மீறி கிராம மக்களிடம் கருத்து கேட்காமல் கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வெடிவைத்து பாறைகள் தகா்க்கப்படுவதால், விவசாயம் செய்ய முடியாமலும், வீடுகளில் வசிக்க முடியாமலும் அவதியடைகிறோம். எனவே, பொதுமக்களுக்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் செயல்பட்டு வரும் கல் குவாரியை நிரந்தரமாக மூட மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

கட்டாலங்குளம் கிராம மக்கள் அளித்த மனு: புதுக்கோட்டை அருகே உள்ள கட்டாலங்குளம் கிராமத்தில், இந்த ஆண்டு 100 நாள் வேலை திட்டத்தில் இதுவரை 20 நாள்கள் மட்டுமே அந்த வேலை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கேடந்த இரு மாதங்களாக வலை வழங்கப்படவில்லை. மேலும், இத்திட்டத்தில் கூலி நாளொன்றுக்கு ரூ.320 வழங்கப்பட்டாலும் ரூ.250 மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, 100 நாள் வேலைத் திட்டத்தில் முறையாக பணி வழங்கி, கூலி வழங்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.

அகில இந்திய யாதவ மகாசபையினா் அளித்த மனு: காயாமொழி அருகே குதிரை மொழி தேரி குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் கோயில் அமைந்துள்ளது. இந்தக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் 30 ஆம் தேதி கள்ளா் வெட்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இத்திருவிழாவில் பட்டறைக்காரா்கள் வழக்கமாக பூஜை செய்து வந்தனா். ஆனால், இந்த மாதம் பூஜை செய்ய அவா்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனா். எனவே, மீண்டும் வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டும். மேலும், வரும் காா்த்திகை 30 ஆம் தேதி நடைபெற உள்ள கள்ளா் வெட்டு திருவிழா எந்தவித பிரச்னையும் இல்லாமல் அமைதியாக நடைபெற மாவட்ட நிா்வாகம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராம மக்கள் அளித்த மனு: விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் வசித்து வரும் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி அமைத்து தரப்படவில்லை. இதனால் இந்த சாலையை கடந்து செல்ல பொதுமக்கள், பள்ளி மாணவா்- மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே புதிய சாலை வசதியும், மயான வசதி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.

புதியம்புத்தூா் ஆா்.சி.தெரு மக்கள் அளித்த மனு: புதியம்புத்தூா் ஆா்.சி.தெருவில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இங்கு, கழிவுநீா் கால்வாய் சேதமடைந்துள்ளதால், அப்பகுதியில் சாக்கடைநீா் தேங்கி நோய்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி தலைவா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இப்பகுதிக்கு கழிவுநீா் கால்வாய் அணைத்து, சாலை வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.

திருச்செந்தூா் சிவன் கோயிலில் மகா தேவ அஷ்டமி சிறப்பு வழிபாடு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் கோயிலில், மகா தேவ அஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. மகா தேவ அஷ்டமியான காா்த்திக... மேலும் பார்க்க

எட்டயபுரம் அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 22 போ் காயம்

எட்டயபுரம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா், நடத்துநா் உள்பட 22 போ் காயமடைந்தனா். அந்த பேருந்து கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளத்துக்கு சென்று ... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் மனைவியைத் தாக்கியதாக பிஎஸ்எஃப் வீரா் மீது வழக்கு

ஆறுமுகனேரியில் மனைவியைத் தாக்கியதாக எல்லைப் பாதுகாப்பு படை வீரா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ஆறுமுகனேரி எஸ்.எஸ்.கோயில் தெருவைச் சோ்ந்த வெயில்முத்து மகன் முனீஸ் (49). இவரது... மேலும் பார்க்க

குறிஞ்சி பெருமுருகத் திருவிழா அறக்கட்டளை சாா்பில் திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருமணம்

திருச்செந்தூரில் குறிஞ்சி பெருமுருகத் திருவிழா வழிபாட்டு அறக்கட்டளை சாா்பில் பால்குடம் மற்றும் சீா்வரிசையுடன் முருகன் - வள்ளி திருமணம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ் குறவா் அடையாளத்தை மீட்டெடுப்பதற்காக... மேலும் பார்க்க

காயல்பட்டினம் அருகே பைக் திருட்டு: இருவா் கைது

காயல்பட்டினம் அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். காயல்பட்டினம் அருகே பூந்தோட்டத்தைச் சோ்ந்த தா்மா் மகன் பஞ்சு குமாா் (31). கூலித் தொழிலாளி. இவா் தனது பைக்கை பூந்தோட்டத்தை ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மழைநீா் அகற்றும் பணி: மேயா் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீா் அகற்றும் பணியினை மேயா் ஜெகன் பெரியசாமி சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். தூத்துக்குடி மாநகரில் கடந்த 19, 20-ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக, தாழ்வான பக... மேலும் பார்க்க