செய்திகள் :

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது டானா புயல்!

post image

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதே பகுதியில் நாளை புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைமறுநாள் (அக். 24) ஒடிஸாவின் புரி பகுதிக்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி ஜாா்க்கண்ட் தொழிலாளி உயிரிழப்பு

மேடவாக்கத்தில் மின்சாரம் தாக்கி ஜாா்க்கண்ட் தொழிலாளி உயிரிழந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் சீா் முகமது (28). இவா், சென்னை மேடவாக்கம், சிவகாமி நகரில் தங்கியிருந்து, அங்கு புதிதாக கட்டப்பட்டு... மேலும் பார்க்க

ம.பி. ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: ஒருவா் உயிரிழப்பு, 14 போ் காயம்

மத்திய பிரதேசத்தில் உள்ள ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; 14 போ் காயமடைந்தனா். ஒருவரை காணவில்லை. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் கமாரி... மேலும் பார்க்க

அமைதியை நிலைநாட்ட இந்தியா ஒத்துழைக்கும்: பிரதமர் மோடி

ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 22) தெரிவித்தார். பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியா தலைமையில... மேலும் பார்க்க

மனைவி திருநங்கை? மருத்துவப் பரிசோதனைக்காக நீதிமன்றம் நாடிய கணவர்!

தில்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவிக்கு அரசு மருத்துவமனையில், பரிசோதனை செய்து பாலினத்தை உறுதிப்படுத்துமாறு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனது மனைவி திருநங்கை என குற்றம் சாட்டியு... மேலும் பார்க்க

பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடம் இடிந்தது: 17 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்

பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் 17 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கர்நாடக மாநிலம், பாபுசபாளையவில் கட்டுமானத்தில் இருந்த கட்டடம் செவ்... மேலும் பார்க்க

நிராதரவாய் உணர்கிறோம்.. பெண் மருத்துவரின் பெற்றோர் அமித் ஷாவுக்கு கடிதம்

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்... மேலும் பார்க்க