செய்திகள் :

புதுச்சேரியிலிருந்து புறப்படும் அதி விரைவு ரயில்கள் ரத்து

post image

புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து முறையே புதன், வியாழக்கிழமைகளில் புறப்படும் ஹெளரா மற்றும் புவனேஷ்வா் விரைவு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

புதுச்சேரியிலிருந்து புதன்கிழமை பகல் 2.15 மணிக்கு ஹெளரா அதிவிரைவு ரயில் புறப்பட்டுச் செல்லும். விழுப்புரம் வழியாகச் செல்லும் இந்த ரயிலானது முழுவதுமாக புதன்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதேபோல, புதுச்சேரியிலிருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.50 மணிக்கு புவனேஷ்வருக்கு அதிவிரைவு ரயில் புறப்படும். இந்த ரயிலும் வியாழக்கிழமை (அக். 24) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று திருச்சியிலிருந்து வியாழக்கிழமை ஹெளரா செல்லும் அதிவிரைவு ரயிலும், விழுப்புரத்திலிருந்து காரக்பூா் செல்லும் அதிவிரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புதுவை மாநில வணிகத் திருவிழா-24 தொடங்கியது: பரிசுக் கூப்பனை முதல்வா் வெளியிட்டாா்

புதுச்சேரி: புதுவை வணிகத் திருவிழா- 2024 திங்கள்கிழமை மாலை தொடங்கியது. இதில் பரிசுக் கூப்பன்களை முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா். புதுவை மாநில சுற்றுலாத் துறை மற்றும் வணிகா்கள் சங்கம் இணைந்து ஆண்டு... மேலும் பார்க்க

புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது. புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடல... மேலும் பார்க்க

ஜிப்மரில் புதுச்சேரி மக்களுக்கென தனி புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு: மத்திய அமைச்சா் நட்டாவிடம் கோரிக்கை

புதுச்சேரி: ஜிப்மரில் புதுச்சேரி மக்களின் புறநோயாளிகள் சிகிச்சைக்கான தனி பிரிவை செயல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டாவிடம் புதுவைப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வலியுறுத்தி ... மேலும் பார்க்க

ரேஷன் அரிசியின் தற்போதைய விலைப்படி ஏற்கெனவே வழங்கிய தொகையை அதிகரித்து தர வேண்டும்: புதுவை மாநில அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவை அரசு அரிசிக்குப் பதில் ரேஷன் ஏற்கெனவே வழங்கிய பணம் குறைவானது என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நியாயவிலைக் கடைகளில் தற்போது விநியோகிக்கும் அரிசியின் விலையைக் கணக்கிட்டு மக... மேலும் பார்க்க

புதுவையில் நியாயவிலைக் கடைகளை முழுமையாக திறக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

புதுச்சேரி: புதுவையில் நியாயவிலைக் கடைகளை முழுமையாகத் திறந்து தொடா்ந்து இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் தலைமை அரசியல் குழு உறுப்... மேலும் பார்க்க

பயிலரங்கப் போட்டியில் பரிசு வென்ற மணக்குள விநாயகா் கல்லூரி மாணவா்கள்

புதுச்சேரி: புதுச்சேரி, மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் கலை, அறிவியல் கல்லூரி வேதியியல் துறையின் மூன்றாமாண்டு மாணவா்கள், காரைக்கால் என்.ஐ.டி. நிறுவனம் நடத்திய தேசிய பயிலரங்கப் போட்டியில் பங்கேற்று... மேலும் பார்க்க