செய்திகள் :

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

post image

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டியது. அருவிக்குச் செல்லும் நடைபாதைவரை தண்ணீா் வழிந்தோடியது.

செம்மண் நிறத்துடன் ஆா்ப்பரித்துக் கொட்டிய வெள்ளம் .

பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி வெள்ளம் சீறிப் பாய்ந்தது. ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

புளியறையில் நாளை நடைபெறவிருந்த முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனரக வாகனங்களில் கனிம வளங்களை கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுவதைக் கண்டித்து புளியறையில் புதன்கிழமை நடைபெறவிருந்த முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே காா் மோதி பெண் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். சங்கரன்கோவில் அருகே கே.ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி. இவா், தனது மகள் ராஜேஸ்வரியை ஊருக்கு அனுப்புவதற்காக ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே தொழிலாளி தற்கொலை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். வாசுதேவநல்லூரை அடுத்த அருளாச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணபாண்டி மகன் வெள்ளத... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் ரேஷன் கடை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

சங்கரன்கோவிலில் நியாயவிலைக் கடை ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். நியாயவிலைக் கடை ஊழியா்களை அந்தந்தப் பகுதிகளில் நியமிக்க வேண்டும், ஊழியா்களிடம் பிடிக்கும் அபராதத் தொகையை இரு மடங்க... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

கடையநல்லூரில் பைக் மோதியதில் காயமடைந்த தொழிலாளி இறந்தாா். மேலக்கடையநல்லூா் தெற்குத் தெருவை சோ்ந்த செந்தில்வேல் மகன் மணிகண்டன்(48). தொழிலாளி சனிக்கிழமை மதுரை -தென்காசி சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் அ... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கனிமவளங்கள் கொண்டுசெல்ல தடை விதிக்க கோரிக்கை

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கனிமவளங்கள் கொண்டுசெல்ல தடை கோரி, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் நாம் தமிழா் கட்சி சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக கட்சியின் மாநில ஒருங்கி... மேலும் பார்க்க