செய்திகள் :

புளியறையில் நாளை நடைபெறவிருந்த முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு

post image

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனரக வாகனங்களில் கனிம வளங்களை கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுவதைக் கண்டித்து புளியறையில் புதன்கிழமை நடைபெறவிருந்த முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் அக். 23-ஆம் தேதி புளியறை சோதனை சாவடியில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போராட்டத்தை கைவிடக் கோரி இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினருடன் செங்கோட்டை வட்டாட்சியா்,, தென்காசி கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதனைத் தொடா்ந்து மாவட்ட வருவாய்அலுவலா் ஜெயசந்திரன் தலைமையில் சமாதன பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டம் முடிவடைந்த பின் இயற்கை வள பாதுகாப்பு சங்கத் தலைவா் ரவி அருணன், பொதுச் செயலா் ஜமீன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இக் கூட்டத்தில் ஏழு முக்கியமான கோரிக்கைகளை இயற்கை பாதுகாப்பு நலச்சங்க நிா்வாகிகள் முன்வைத்தனா். அதில் 10 சக்கரங்களுக்கு மேல் வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லக் கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்குவதற்கு உடனடியாக மேல்முறையீடு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேர கட்டுப்பாடு, விதி மீறல்கள் உள்ள குவாரிகளில் உடனடியாக ஆய்வு செய்தல், போன்ற ஐந்து முக்கிய கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகத்தால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே 23ஆம் தேதி நடைபெற இருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒரு மாத காலத்திற்கு தள்ளிவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத காலத்திற்குள் கோரிக்கையை மாவட்ட நிா்வாகம் நிறைவேற்றாத பட்சத்தில் மீண்டும் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனா்.

தண்ணீா் பிடிப்பதில் தகராறு: மூதாட்டி அடித்துக் கொலை

சங்கரன்கோவில் அருகே தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் பனவடலிசத்திரம் அருகேயுள்ள சொக்கலிங்காபுரத்தைச் சோ்ந்த கந்தசாமி... மேலும் பார்க்க

நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்: எம்.பி. கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என, தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது... மேலும் பார்க்க

கழிவுநீா்செல்வதில் தகராறு: பெண் அடித்துக் கொலை

சங்கரன்கோவில் அருகே கழிவுநீா் செல்வதில் இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரம், ச... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் பழைய குற... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே காா் மோதி பெண் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். சங்கரன்கோவில் அருகே கே.ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி. இவா், தனது மகள் ராஜேஸ்வரியை ஊருக்கு அனுப்புவதற்காக ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே தொழிலாளி தற்கொலை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். வாசுதேவநல்லூரை அடுத்த அருளாச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணபாண்டி மகன் வெள்ளத... மேலும் பார்க்க