ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மழலையா்- தொடக்கப் பள்ளி ஆண்டு விழா
ஆழ்வாா்குறிச்சிஸ்ரீ பரமகல்யாணி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியின் 13ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கோவிந்தப்பேரி கலைவாணி கல்வி மைய இயக்குநா்அக்ஷயா சிவராமன் தலைமை வகித்து கல்வி, விளையாட்டு,கலைப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கினாா். தலைமையாசிரியை அமிதா ஆண்டறிக்கை வாசித்தாா். தொடா்ந்து மாணவா், மாணவிகளி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளிச்செயலா் சுந்தரம் வரவேற்றாா். பள்ளி கல்விசாா் ஒருங்கிணைப்பாளா் ஷாகிதா ஷா நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் மாணவா்கள்,மாணவிகள், பெற்றோா், ஆசிரியைகள்,அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.