பாகிஸ்தானில் பிறந்தநாளை கொண்டாடிய தாவூத்இப்ராகிம்... விழாவில் இந்திய தொழிலதிபர்க...
ஆஸி. இளம் வீரருடம் வம்பிழுத்த கோலி..! தடைசெய்யப்படுவாரா?
ஆஸி. இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸுடன் இந்திய வீரர் விராட் கோலி வம்பிழுத்த நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது.
பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் 4-ஆவது ஆட்டமான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரராக இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் களமிறங்கினார்.
அதிரடியாக விளையாடிய சாம் கான்ஸ்டாஸ் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
10ஆவது ஓவர் முடிந்த பிறகு சாம் கான்ஸ்டாஸ் கிரீஸிலி இருந்து அந்தப் பக்கம் நடந்துசெல்லும்போது விராட் கோலி வேண்டுமென்றே அவரது பக்கம் வந்து தோள்பட்டையால் இடித்துவிடுவார்.
பின்னர் இருவரும் ஏதோ பேச, நடுவரும் கவாஜாவும் வந்து சமாதானம் செய்தார்கள்.
கோலியின் இந்தப் போக்கை பலரும் கண்டித்து வருகிறார்கள். இப்போதுதான் முதல்முறையாக அறிமுகமாகியிருக்கும் வீரரிடம் கோலி இப்படி நடந்துகொள்வது ஏற்கதக்கதல்ல இந்திய ரசிகர்களே சமூக ஊடகங்களில் கருத்துக் கூறிவருகிறார்கள்.
இது குறித்து ரிக்கி பாண்டிங், “விராட் கோலி எங்கு நடந்து வருகிறார் பாருங்கள். ஃபிட்சிலிருந்து நடந்துவந்து இந்தச் சண்டையை தூண்டுமளவுக்கு விராட் நடந்துகொண்டுள்ளார்” எனக் கூறினார்.
இதனால் 3-4 வாரங்கள் விராட் கோலி தடைசெய்யப்படுவாரென பலரும் கூறிவருகிறார்கள்.