இங்கிலாந்து தொடர்: இந்தியாவை வெல்ல உதவிய நியூசி. வீரருக்கு அணியில் இடமில்லை!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடருக்கான நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் நாதன் ஸ்மித் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமாகிறார். மேலும், இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 3-0 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியைப் பெற்ற நியூசிலாந்து அணியில் தொடர் நாயகன் விருதை வென்ற வீரர் வில் யங் அணியில் இருந்து கலட்டிவிடப்பட்டுள்ளார். இந்தியா தொடரில் வில் யங் 244 ரன்கள் எடுத்திருந்தார்.
இதையும் படிக்க..:2025 ஐபிஎல் ஏலம்: 182 வீரர்கள்; ரூ.639 கோடிக்கு ஏலம்
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தொடக்க போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நாளை(நவ.28) தொடங்குகிறது. இந்தப் போட்டியில் நாதன் ஸ்மித் அறிமுகமாகிறார். இதனால், நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஜேக்கப் டஃபிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஹாக்லி ஓவலில் நடக்கும் முதல் டெஸ்டில், முன்னாள் கேப்டனும் நம்பர் 2 டெஸ்ட் பேட்டஸ்மேனுமான கேன் வில்லியம்சன் காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க..: முதல் டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி மே.இ.தீவுகள் அபார வெற்றி!
நியூசிலாந்து தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் தொடரை ஒயிட்வாஷ் செய்து வென்றால் மட்டுமே அடுத்த ஆண்டு லார்ட்ஸில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஆடமுடியும்.
நியூசிலாந்து அணி
டாம் லாதம் (கேப்டன்), டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளன்டெல், கிளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, டிம் சௌதி, வில் ஓ’ரூர்க்.