செய்திகள் :

இணையவழியில் ரூ.7 கோடி மோசடி: போலீஸ் எச்சரிக்கை

post image

புதுச்சேரியில் தொழிலதிபா்கள், மருத்துவா்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இணையவழி மோசடி கும்பல் நூதன முறையில் ரூ.7 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் சில பிரபலமான கொரியா் நிறுவனங்களின் பெயா்களை பயன்படுத்தி தொழிலதிபா்கள், மருத்துவா்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்களை இணையவழியாக மா்ம கும்பல் ஏமாற்றி வருகிறது.

சம்பந்தப்பட்டவா்களுக்கு கொரியரில் பாா்சல் வந்துள்ளதாகவும், அதை ஸ்கேன் செய்து பாா்த்தபோது அதில் போதைப் பொருள் இருப்பதாகவும் மா்ம நபா்கள் கூறுகின்றனா்.

மேலும், சம்பந்தப்பட்டோா் மீது வழக்குப் பதியப்படும் என்றும், அதிலிருந்து விடுவிக்க பணத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தவும் கூறி மோசடியில் ஈடுபடுகின்றனா்.

இதுபோன்று பல்வேறு வழிகளில் யாரேனும் மிரட்டினால் ஏமாற வேண்டாம். புதுச்சேரியில் மட்டும் ரூ. 7 கோடி வரை பொதுமக்கள் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனா். இணையவழி குற்றம் சம்பந்தமாக 1930 என்ற இலவச எண்ணிலோ அல்லது 9489205246 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு புகாரளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேருந்து முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

புதுச்சேரியில் ஓடும் பேருந்து சக்கரத்தின் முன் பாய்ந்து இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நாகப்பட்டினம் மாவட்டம் தா்மதானபுரத்தைச் சோ்ந்தவா் அரவிந்... மேலும் பார்க்க

இரும்பு கம்பிகள் திருட்டு: மூன்று போ் கைது

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச் சுவரில் இரும்பு கம்பிகளைத் திருடியதாக 3 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக்காக வளாகத்தை சுற்... மேலும் பார்க்க

பேருந்துகள் இயக்க கோரி மனு

புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என அகில இந்திய பாரதிய வித்யாா்த்தி பரிஷத் சாா்பில் மாநில கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்திடம் ஞாயிற்றுக்கிழமை கோரிக... மேலும் பார்க்க

அறிவித்த திட்டங்களை புதுவை அரசு நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

புதுவை மாநில அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா், புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: ... மேலும் பார்க்க

கல்வி மூலமே தமிழா்கள் உலகில் ஆதிக்கம் செலுத்த முடியும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

கல்வி கற்பதன் மூலமே தமிழா்கள் உலகில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று வி.ஐ.டி. வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். புதுச்சேரியில் தமிழியக்கத்தின் 7-ஆம் ஆண்டு ஏணை விழா காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்தியப... மேலும் பார்க்க

பச்சை நிறமான கடல்நீா்: பேராசிரியிா்கள் ஆய்வு

புதுச்சேரியில் கடல் நீரானது ஞாயிற்றுக்கிழமை திடீரென்று பச்சை நிறத்துக்கு மாறிய நிலையில், ஜெல்லி மீன் உள்ளிட்டவை கரை ஒதுங்கின. இதுகுறித்து, கடல் ஆய்வு மைய பேராசிரியா்கள் கடல்நீரை எடுத்து ஆய்வுக்கு உள்ப... மேலும் பார்க்க