இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (எஸ்ஐடிபிஐ) காலியாக உள்ள கிரேடு ‘ஏ’ மற்றும் கிரோடு ‘பி’ பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியானது (எஸ்ஐடிபிஐ), உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் நிதியளிப்பதை முதன்மையான பணியாக கொண்டு செயல்படும் ஒரு தேசிய நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 50 கிரேடு ‘ஏ’ மற்றும் 22 கிரோடு ‘பி’ பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager(Grade ‘A’)
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.44,500 - 89,100
வயதுவரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வணிகவியல், பொருளாதாரம், கணிதவியல், புள்ளியியல், வர்த்தக மேலாண்மை, பொறியியல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது சிஎஸ், சிஎப்ஏ, சிஏ, எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Manager (Grade ‘B’)
காலியிடங்கள்: 22(பொது 10, சட்டம் 6, ஐடி 6)
சம்பளம்: மாதம் ரூ.55,200 - 99,700
வயதுவரம்பு: 21 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுகலை பட்டம், சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.sidbi.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ. 1100, இதர அனைத்து பிரிவினரும் ரூ.175 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.12.2024
மேலும் விவரங்கள் அறியஇங்கே கிளிக் செய்யவும்.