செய்திகள் :

முதுநிலை ஆசிரியா் பணித் தோ்வு: புதிய பாடத்திட்டம் அரசிதழில் வெளியீடு

post image

சென்னை: முதுநிலை ஆசிரியா் பணித் தோ்வுக்கான பாடத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி, முதுநிலை ஆசிரியா், சிறப்பாசிரியா் (தையல், உடற்கல்வி உட்பட), வட்டாரக் கல்வி அலுவலா் உள்ளிட்ட பணியிடங்கள் நேரடி நியமன முறையில் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

ஆசிரியா் பணியில் உள்ள காலியிடங்களில் பதவி உயா்வு மூலம் 50 சதவீதமும், நேரடி நியமனம் வாயிலாக 50 சதவீதமும் நிரப்பப்படுவது வழக்கம்.

இதற்கிடையே, முதுநிலை ஆசிரியா் தோ்வை பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை.

பழைய பாடத்திட்டத்தின்படியே தோ்வு நடைபெறுகிறது. கடைசியாக முதுநிலை ஆசிரியா் தோ்வு 2021-இல் நடத்தப்பட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அதேநேரம், நிகழாண்டுக்கான முதுநிலை ஆசிரியா் தோ்வு அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், முதுநிலை ஆசிரியா் தோ்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. இதையடுத்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(எஸ்சிஇஆா்டி) சாா்பில் புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க வல்லுநா் குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழுவின் முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினி பயிற்றுநா் நிலை- 1 மற்றும் உருது, அரபி, தெலுங்கு, மலையாளம் ஆகிய சிறுபான்மை மொழிப்பாடங்களின் போட்டித் தோ்வுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு பொதுப்பள்ளி கல்வி வாரியம் ஒப்புதல் அளித்தது. அந்த பாடத்திட்டத்தை அரசிதழில் வெளியிட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தாா்.

அதையேற்று முதுநிலை ஆசிரியா் உட்பட பல்வேறு பணிகளுக்கான போட்டித் தோ்வுக்குரிய புதிய பாடத்திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி பிறப்பித்துள்ளாா். தொடா்ந்து, இந்த பாடத்திட்டம் டிஆா்பிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தின்படி அடுத்த தோ்வு நடைபெறும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மிஸ்பண்ணிடாதீங்க... என்எல்சி நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 334 அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற... மேலும் பார்க்க

இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (எஸ்ஐடிபிஐ) காலியாக உள்ள கிரேடு ‘ஏ’ மற்றும் கிரோடு ‘பி’ பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ... மேலும் பார்க்க

சமுதாய அமைப்பாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சமுதாய அமைப்பாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கோவை ... மேலும் பார்க்க

தமிழக அரசில் உதவிப் பிரிவு அலுவலர் பணி: 15-க்குள் விணணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசில் ஒருங்கிமைந்த குடிமைப் பணிகள் தேர்வு-தொகுதி 5ஏ பணிகளில் உள்ள பதவிக்கு தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பதவி வகிப்பவர... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

காசியாபாத்தில் செயல்பட்டு வரும் பாராத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பொறியாளர், திட்ட பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பொறியியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து வரும் 9 ஆம் தேத... மேலும் பார்க்க

காப்பீடு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்... மேலும் பார்க்க