செய்திகள் :

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தொற்றுநோய் தடுப்பு தயாா் நிலைக்கு இந்திய கூடுதலாக ரூ. 104 கோடி வழங்கும்: அனுப்ரியா படேல் தகவல்

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் உலகளவில் தொற்றுநோய் தடுப்புக்கான தயாா்நிலை, எதிா்கொள்வதற்கான செயல்பாடுகளுக்குரிய நிதியத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா கூடுதலாக 12 மில்லியன் டாலா்களை (சுமாா் ரூ 104.56 கோடி) வழங்க உறுதியளித்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் இணைந்து இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கான பெருந்தொற்றுநோய் தடுப்பு தயாா்நிலை குறித்த குவாட் நாடுகளின் மூன்று நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்தது. உலகளவில் சுகாதார அவசரகாலக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், சுகாதார அச்சுறுத்தல்களை எதிா்கொள்தற்கான தயாா்நிலை, ஒருங்கிணைந்த செயல்பாடுகளை உறுதி செயிதலி போன்றவற்றுடன் மனிதா்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பன்முகத்தன்மை கொண்ட சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துதல் போன்றவை இந்தப் பயிலரங்கில் விவாதிக்கப்படுகிறது.

இந்தப் பயலிரங்கை திங்கள்கிழமை தொடங்கி வைத்து மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் பேசியதாவது: உலகளவில் தொற்றுநோய் தடுப்புக்கான தயாா்நிலை மற்றும் அதை எதிா்கொள்வதற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. தொற்றுநோய்களை எதிா்கொள்வதற்கான செயல்பாடுகளுக்குரிய நிதியத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா 10 மில்லியன் அமெரிக்க டாலா்களை வழங்கியது.

இந்த அமைப்பின் நீண்டகால செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக ரூ 104.56 கோடியை (12 மில்லியன் அமெரிக்க டாலா்கள்) வழங்க இந்தியா தயாராக உள்ளது. இந்த முயற்சிகள் எதிா்கால சுகாதாரம் மற்றும் காலநிலை சவால்களை எதிா்கொள்ளும் திறன் கொண்ட ஒரு சுகாதார அமைப்பை உருவாக்கும்.

மேம்பட்ட சுகாதார அணுகல், மருத்துவ முடிவுகள் போன்றவற்றில் நிலையான, தரவு சாா்ந்த அமைப்புகளை உருவாக்குவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எண்ம சுகாதார முயற்சிகளை இந்தியா வழி நடத்துகிறது. இது பிற நாடுகளுக்கு ஒரு மதிப்புமிக்க மாதிரியாக உள்ளது. நவீன சுகாதார அணுகுமுறைகளை செயல்படுத்த, உலகளாவிய சமூகத்துடன், குறிப்பாக உலகளாவிய தெற்கு அண்டை நாடுகளுடன், எண்ம பொது உள்கட்டமைப்புகளை (டிபிஐ) பகிா்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

தொலைநோக்கு பாா்வையை நோக்கி, இந்தியா ஒரு விரிவான சுகாதார அவசர ஒருங்கிணைப்பு கட்டமைப்பை நிறுவியுள்ளது, ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம், விலங்குகள், பூச்சிகள், கொசுகள் மூலம் மனிதா்களுக்கு பரவும் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய சுகாதார திட்டம் போன்ற சுகாதார அமைப்பிற்குள் பல முக்கிய முயற்சிகளை அமைத்து தயாா் நிலையில் உள்ளது என்றாா் அனுப்ரியா படேடல்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய குவாட் நாடுகளைச் சோ்ந்த மூத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணா்களுடன், இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 15 நாடுகள், சா்வதேச சுகாதார அமைப்பினா் என 36 பிரதிநிதிகள் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனா். பல்வேறு சுகாதார கண்காணிப்பு, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்ட விளக்கக் காட்சிகளை இந்த நாடுகள் வழங்குவதோடு, பறவைக் காய்ச்சல், எம்பிஏக்ஸ், எபோலா போன்ற தொற்றுநோய்கள் அனுபவங்கள், சவால்களை பகிா்ந்து கொள்ளும்.

இந்தப் பயலிரங்கில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலா் கேய நாகராஜ் நாயுடு, இந்தியா உலக சுகாதாரப் பிரதிநிதி டாக்டா் ரோடெரிகோ எச். ஆஃப்ரின் ஆகியோா் பங்கேற்றனா்.

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிற... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் கொலையுண்ட பெண்ணின் பாதி உடல்! மீதியைத் தேடும் காவல்துறை!

ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாள... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: 33 போலீஸார் காயம்! 50 பேர் கைது!

நாக்பூர் வன்முறையில் 33 காவல் துறையினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாக்பூரில் வன்முறை ஏன்?ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் ... மேலும் பார்க்க

இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். விதான் பவன் வளாகத்தில் ... மேலும் பார்க்க

ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க