Deepak Chahar: "என் இதயம் எப்போதும் CSK-வுடன் தான்.." - தீபக் சஹாரின் மனைவி நெகி...
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்: சீமான்
தமிழக மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை ராணுவத்தை கண்டிக்க, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
தூத்துக்குடியில் விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழக மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை மீது, பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்பதோடு, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவது தடுக்கப்படும்.
அதிமுக ஆட்சியின்போது அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள், தற்போதைய திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை உதயசூரியன் வடிவத்தில் கட்டியுள்ளனா். மக்கள் பணத்தில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டங்களில் கட்சி சின்னம் இடம் பெறுவதையும், மறைந்த கட்சித் தலைவா்கள் பெயரையும் வைக்கின்றனா்.
ஆட்சி அதிகாரம் தமிழனின் கைக்கு வரும்போது இவையெல்லாம் மாறும்.
திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல. தோ்தலுக்காக இவை இரண்டும் ஒன்றும் என்று பேசுகின்றனா். தமிழகத்தில் நாம் தமிழா் கட்சியின் கொள்கையைக் கொண்ட கட்சிகள் எதுவும் இல்லை. எனவே, வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துதான் போட்டியிடவுள்ளோம் என்றாா்.